செய்திகள் :

`மாபியா அச்சுறுத்தல்; மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லாதீர்' பாலிவுட் நடிகர்களுக்கு போலீஸ் வேண்டுகோள்

post image

மும்பையில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது சமீபத்தில் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத் துப்பாக்கிச்சூடுச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது பல பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் குற்றவாளிகள் உளவு பார்த்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, பாலிவுட் நட்சத்திரங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், பொது இடங்களில் ரசிகர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்கவும் மும்பை போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மும்பையை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், நடிகர்கள் பொது இடங்களுக்குச் செல்வதையும், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் ரசிகர்களுடன் பழகுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

அமிதாப்பச்சன்

பாலிவுட் நடிகர்கள் பலர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். நடிகர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர், தாக்குதலுக்கு முன்னதாக அமிதாப் பச்சன் மற்றும் சல்மான் கான் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களின் இல்லங்களை நேரில் சென்று ஆய்வு செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக உள்ள பிரபலங்களை இலக்கு வைக்குமாறு துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உளவு பார்த்த சமயத்தில், வெவ்வேறு ஆட்டோ ஓட்டுநர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களை அமிதாப் பச்சன், அமீர் கான், அக்‌ஷய் குமார் மற்றும் சல்மான் கான் உள்ளிட்ட பல பிரபலங்களின் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தனர். டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் தங்களது பாதுகாப்பை அதிகரித்துக்கொண்டுள்ளனர். மேலும் இத்துப்பாக்கிச்சூடு குறித்து அமால் மாலிக், மீகா சிங், வித்யுத் ஜம்வால், சத்ருகன் சின்ஹா ​​மற்றும் ரவி கிஷன் உள்ளிட்ட திரைப்படத் துறையைச் சேர்ந்த பலர் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

4 லட்சம் பேருக்கு அழைப்பு, பாலிவுட் பிரபலங்கள் வருகை; மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தும் பீகார் MLA

பீகாரில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆனந்த் சிங். இவர் தனது இளைய மகள் சிவாங்கி சிங்கிற்கு வரும் 25ம் தேதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார். அவர் திருமணத்திற்குச் செய்து வரும் ஏற்பாடுகள் அனைவருக்கும... மேலும் பார்க்க

'163 நிமிட யுத்தம்...சென்னையின் பட்டாசு புகையில் ஆடி வென்ற போலந்து வீராங்கனை!' - Chennai Open 2026

சென்னையில் நடைபெற்ற WTA 250 சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், போலந்தின் மக்டா லினெட் (Magda Linette), இந்தோனேசியாவின் ஜானிஸ் டிஜெனை (Janice Tjen) வீழ்த்தி சாம்பியன... மேலும் பார்க்க

மே.வங்கம்: வேலிக்கு கீழே குழி தோண்டி 3வது முறையாக தப்பி, சொந்த ஊரான அஸ்ஸாம் நோக்கி செல்லும் புலி

அஸ்ஸாம் மாநிலத்தின் ராய்மோனா பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட மூன்று வயது பெண் புலி மேற்கு வங்கத்தின் பக்ஸா புலிகள் காப்பகத்தில் இருந்து தப்பியோடிவிட்டது. அந்த காப்பகத்தில் 2.2 ஹெக்டேர் கம்பி வேலி அமைக... மேலும் பார்க்க

டெல்லி: கையில் இருந்த ராக்கெட் பட்டாசு வெடித்து சிதறி, நெஞ்சில் பாய்ந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு

தீபாவளி என்றாலே அனைவருக்கும் பட்டாசுதான் நினைவுக்கு வரும். பட்டாசு வெடிக்கும் போது அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். தமிழ் நாட்டில் தீபாவளி ஒரு நாளில் முடிந்துவிடும். ஆனால் வட... மேலும் பார்க்க

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை தீவிரம்: சரத் பவாருடன் அஜித் பவார் மகன் ஆலோசனை!

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரால் தொடங்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கடந்த 2023ம் ஆண்டு அஜித் பவார் மூலம் பிளவு ஏற்பட்டது. அதன் பிறகு இரு அணிகளும் தனித்தனியாக செயல்பட ஆரம்பித்தன. தேசியவாத க... மேலும் பார்க்க

72 ஆண்டுகளாகத் தீபாவளி இல்லை - முன்னோர் வாக்குக்குக் கட்டுப்படும் சிங்கம்புணரி 12 கிராமங்கள்!

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுச் சத்தம், தித்திக்கும் பலகாரங்கள் என ஊரே கோலாகலமாக இருக்கும். ஆனால், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம மக்கள் கடந்த 72 ஆண்டுகளாகத் தீபாவளிப... மேலும் பார்க்க