செய்திகள் :

பிரிட்டன்: ஸ்டார்மர் அதிரடி ராஜினாமா... அடுத்த பிரதமராகப் போகிறாரா ஆண்டி பர்ன்ஹாம்? யார் இவர்?!

post image

பிரிட்டன் அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், லேபர் கட்சியின் கீர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தார்.

பிரிட்டன் அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ள இந்த முடிவைத் தொடர்ந்து, லேபர் கட்சியின் அடுத்த தலைவராகவும், பிரிட்டனின் அடுத்த பிரதமராகவும் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

ஆண்டி பர்ன்ஹாம்
ஆண்டி பர்ன்ஹாம்

யார் இந்த ஆண்டி பர்ன்ஹாம்?

வடமேற்கு இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் 1970-ல் பிறந்து வளர்ந்த இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்று, தனது 15 வயதிலேயே லேபர் கட்சியில் இணைந்தவர் ஆவார்.

2001-ல் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான இவர், தொடர்ந்து டோனி பிளேயர் மற்றும் கார்டன் பிரவுன் அமைச்சரவைகளில் உள்துறை, நிதித்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகிய முக்கிய அமைச்சகங்களில் மூத்த பொறுப்புகளை வகித்தார்.

பின்னர் 2008-ல் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும், 2009-ல் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையை (NHS) நிர்வகிக்கும் சுகாதாரத் துறை அமைச்சராகவும் உயர்ந்தார்.

ஆண்டி பர்ன்ஹாம்
ஆண்டி பர்ன்ஹாம்

2017 முதல் 'கிரேட்டர் மான்செஸ்டர்' பகுதியின் மேயராகப் பணியாற்றியபோது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிராந்திய மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி, பிரிட்டன் மத்திய அரசுக்கு இவர் மேற்கொண்ட சமரசமற்ற போராட்டங்களினால் "கிங் ஆஃப் தி நார்த் (King of the North)" என்று பரவலாக அறியப்பட்டார்.

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் 55% வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பியுள்ள ஆண்டி, இதற்கு முன்னர் 2010-ல் எட் மிலிபாந்திடமும், 2015-ல் ஜெரெமி கார்பினிடமும் லேபர் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தார்.

எனினும், தனது தொடர் அரசியல் போராட்டங்கள் மூலம் தற்போது பிரிட்டனின் அடுத்த பிரதமர் நாற்காலியைக் கைப்பற்றுவார் என அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

"அவர்களுக்கு அடிமைகள்தாம் தேவை" - உத்தவ் கட்சியிலிருந்து விலகியது குறித்து MPக்கள் சொல்வது என்ன?

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து 6 எம்.பி.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்குத் தாவுவதாக அறிவித்திருந்தனர். இதற்காக அவர்கள் முதலி... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: கட்சித் தலைவர் பதவியிலிருந்து மம்தா பானர்ஜி நீக்கம்!? - TMC பரபரப்பு நகர்வு

2026 தேர்தல் எதிரொலிமேற்கு வங்கத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் மம்தா பானர்ஜி. தன் வலுவான குரலாலும், உறுதியான நடவடிக்கைகளாலும் இந்தியா முழுவதும் கவனம் பெற்றவர். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடிப் புகார்: யோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடி! - என்ன நடக்கிறது?

அயோத்தி கோயில் விவகாரம்உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா கோவில், கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அன்று முறைப்படி திறக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

கத்தார் கேஸ் ஆலையில் பயங்கர வெடிவிபத்து; 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது?

கத்தாரில் உள்ள ஒரு மாபெரும் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், 12 இந்தியர்கள் உட்பட 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட... மேலும் பார்க்க

சட்டமன்றக் கூட்டம்: இன்று எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலளிப்பாரா? | Live Update

முதல்வரின் பதில்கள் இன்று!முதல்வர் விஜய்சட்டமன்றத்தின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எழுந்த சலசலப்பில் அதிமுக பொதுச் செயலா... மேலும் பார்க்க