செய்திகள் :

“பிரேமலதா விஜயகாந்த் எடுத்திருக்கும் இந்த சிறப்பான முடிவை வரவேற்கிறேன்” - செல்வப்பெருந்தகை

post image

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது.

தேமுதிக, திமுக கூட்டணியில் இணையுமா அல்லது அதிமுக கூட்டணியில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், இன்று ( பிப்.19) தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறார்.

திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக
திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக

தேமுதிக முதன்முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தேமுதி-கவை வரவேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.

திருமதி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் இணைந்து சிறப்பான முடிவெடுத்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.

சமூகநீதி, மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகப் பண்புகள் மற்றும் மக்கள் நலக் கொள்கைகளை முன்னிறுத்தும் நோக்கில் உருவான இந்த கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை பெற்றதாக இருக்கும்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

மக்களின் நலன், முன்னேற்றம் மற்றும் மாநிலத்தின் வளமான எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட இந்த கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

திமுக-வின் ஆஃபர்; எடப்பாடியின் ஓரவஞ்சனை - பிரேமலதாவின் அறிவாலய விசிட் பின்னணி!

அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பியிருக்கிறார் தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டணிக்குள் வரவேற்று 'அன்புச் சகோதரி' என பாசமழை பொழிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தேமுதிக என்.டி.ஏ... மேலும் பார்க்க

தேர்தல் நெருக்கடியில் தொடரும் போராட்டங்கள்: `சதியா... உரிமையா?' - பரபரக்கும் தமிழ்நாட்டின் களம்!

போராட்டமும் - விவாதமும்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசு ஊழியர்கள் தொடங்கி, அங்கன்வாடி ஊழியர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சிலப் போராட்டங்கள் தற்காலிகமாக முடிவுக்... மேலும் பார்க்க

ஊட்டி : தேசிய கட்சிகளுடன் போட்டி போடும் கழகங்கள் - கூட்டணிக்குள் வெடிக்கும் களேபரங்கள்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு தேதி நெருங்கி வரும் சூழலில், கூட்டணி மாற்றம், தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. குளிர்ச்சி நிறைந்த நீலகிரி மாவட்டத்திலும... மேலும் பார்க்க

'ஓ.பி.எஸ்க்காக உயிரை விட முடியுமா?' - 89 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் புதிதாக 'எம்.ஜி.ஆர் அண்ணா திமுக' என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கியிருக்கிறார்.பத்திரிகையாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், 'எ... மேலும் பார்க்க

"திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது!" - ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மண்டல, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்தாய்வு கூட... மேலும் பார்க்க

இரான் மீது எப்போது தாக்குதல்? - ட்ரம்ப் தலை அசைவிற்காக காத்திருக்கும் அமெரிக்கப் படைகள்!

2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின்... மீண்டுமா? - அமெரிக்கா - இரான் இடையே உருவாகி உள்ள இந்த மோதல்போக்கு இந்தக் கேள்வியை எழுப்புகிறது. இரான் மீது அமெரிக்கா தாக்குதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல்... மேலும் பார்க்க