செய்திகள் :

`பிள்ளைகளுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்துவிட்டு' - மனதை ரணமாக்கும் காஞ்சிபுரம் சம்பவம்!

post image

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஷம்சியா (26). இவருக்கு ஆஷிபா (8), அப்தர் (5) என இரண்டு குழந்தைகள். ஷம்சியாவின் கணவர் ஆசிப் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். கணவர் இல்லாத நிலையில் 2 குழந்தைகளுடன் ஷம்சியா குடும்பம் நடத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.

ஏற்கனவே கடன் தொல்லை அதிகமாக இருந்த நிலையில், கணவர் தற்கொலை செய்து கொண்டதால், கடன்காரர்களுக்குப் பணத்தைக் கொடுக்க முடியாமல், அவர்களிடம் அவமானப்படவேண்டிய நிலையில் ஷம்சியா தவித்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

இளம்பெண்
இளம்பெண்

தற்கொலைக்கு முன்னதாக குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பிய ஐஸ்கிரீம், கேக், பிஸ்கட் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்துச் சாப்பிடச் செய்தார். பின்னர் குழந்தைகளுடன் கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக வயல் வெளியில் நடந்து சென்றார். அங்குள்ள விவசாயக் கிணறு அருகே குழந்தைகளுடன் சிறிது நேரம் பேசினார்.

பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், 2 குழந்தைகளையும் கிணற்றுக்குள் வீசியதுடன், தானும் கிணற்றில் குதித்து மூழ்கினார். நீண்ட நேரத்துக்குப் பின்னர் கிணற்றில் குளிக்க வந்த 2 பேர், கிணற்றில் 3 சடலங்கள் மிதப்பது தொடர்பாக படப்பை காவல்துறை, தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் 3 பேரின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கிணற்று மேட்டில் இருந்த பையில் வைக்கப்பட்டிருந்த தற்கொலைக் கடிதத்தை காவல்துறை கைப்பற்றியது. அதில், ``கடன் தொல்லையால் கணவர் தற்கொலை செய்து கொண்ட பின்னர், நானும், குழந்தைகளும் அவமானப்பட்டோம். உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், அவமானத்துடன் உலகில் வாழப் பிடிக்காமல், என் கணவர் காட்டிய அதே வழியை, நானும் தேர்ந்தெடுத்தேன். 2 குழந்தைகளும், தாய் தந்தை இல்லாமல் அனாதையாகி விடக்கூடாது என்பதற்காக, குழந்தைகளையும் என்னோடு அழைத்துச் செல்கிறேன். வேறு வழியில்லாமல் மிகுந்த மனவேதனையுடன் செல்கிறோம். எங்களை அனைவரும் மன்னித்துக்கொள்ளுங்கள்" - எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முன்பு, நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காரில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி கலைவதற்குள் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் குற்றச்சாட்டு - போலீஸ் விசாரணை!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், செல்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: "என் தங்கமே, என்னை விட்டு போய்ட்டியே" - ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகேயுள்ள திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரின் 13 வயது மகன் பார்த்திபன், பெல் ராமகிருஷ்ணா பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்து வந்தான். திரு.வி.க நகர் ஒன்றாவது தெர... மேலும் பார்க்க

சென்னை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை - தி.மு.க வழக்கறிஞர் கைது!

சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் குடும்பத்துடன் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரின் அம்மா, தமிழக காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக வேலை செய்கிறார். 7-ம் வகுப்... மேலும் பார்க்க

`மாஜிஸ்திரேட் விசாரணைக்கே இடையூறு; ஏட்டு ரேவதியின் துணிச்சல்'- சாத்தான்குளம் வழக்கு கடந்து வந்த பாதை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை- மகன் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த... மேலும் பார்க்க

ரிமோட் கன்ட்ரோல் பாம்பு, புலித்தோல், 150 முறை வெளிநாடு பயணம் - 58 பெண்களை ஜோதிடர் ஏமாற்றியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த அசோக் கராட் என்ற ஜோதிடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தன்னிடம் வரும் பெண்களிடம் உணர்வுபூர்வமாக, கணவர்க... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊராட்சி ஆவணங்கள் திருட்டு; முன்னாள் ஊராட்சி செயலர் மீது வழக்கு! - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவர், இந்த ஊராட்சியின் வரவு செலவு விவரங்கள், கடந்த 2023 அக்டோ... மேலும் பார்க்க