செய்திகள் :

புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு!

post image

தமிழகத்தில் புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.

அப்போது புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

கடந்தாண்டு கலைஞர் கனவு இல்லம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2030-க்கும் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக கடந்தாண்டு ஒரு லட்சம் வீடுகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்தாண்டும் புதிதாக மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்படும். இதற்காக ரூ. 3,500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

மேலும், ஊரகப் பகுதிகளில் பழுதான வீடுகளுக்கு பதிலாக புதிதாக 25,000 வீடுகள் இந்தாண்டு கட்டித் தரப்படும் எனத் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தீ விபத்து!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தங்கும் விடுதியில் திங்கள்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தரைத்தளம் மற்றும் மூன்று த... மேலும் பார்க்க

2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம்.. தவெகவின் போஸ்டரால் பரபரப்பு!

கோவை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் 2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்ற வாசகத்துடன் கோவையில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நடிக... மேலும் பார்க்க

கடவுள் சரியாகத்தான் இருக்கிறார்; சில மனிதர்கள்தான் சரியில்லை: நீதிபதிகள்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பார்க்க

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் ... மேலும் பார்க்க

தமிழக எம்பிக்களுடன் பிரதமரைச் சந்திக்க முடிவு: முதல்வர் ஸ்டாலின்

நியாயமான தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், நியாயமா... மேலும் பார்க்க

மெட்ரோ தூணில் மோதி விபத்து: சேப்பாக்கத்தில் இருந்து திரும்பிய மாணவர்கள் பலி!

சென்னை: சென்னை ஆலந்தூர் அருகே மெட்ரோ தூணில் இருசக்கர வாகனம் மோதியதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலியாகினர்.இருவரும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை கண்டுவிட்டு, வீடு த... மேலும் பார்க்க