செய்திகள் :

புதின் : இன்று இந்தியா வருகிறார்; எதிர்பார்ப்புகள் என்ன?இந்தியாவின் கணக்கு என்ன? | Explained

post image

இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின். இன்றும், நாளையும் அவர் இந்தியாவில் இருக்கப்போகிறார்.

ரஷ்யாவில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி விதித்துள்ளார்.

ட்ரம்ப் எவ்வளவு முயற்சித்தும், ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருவதாக இல்லை. அதனால், 'ரஷ்யாவை சேர்ந்த இரண்டு எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை' என மெல்ல மெல்ல ரஷ்யாவின் மீதான தனது பிடியை இறுக்க தொடங்கியிருக்கிறார் அவர்.

இந்த நேரத்தில் புதின், இந்தியாவிற்கு வருவது மிகவும் முக்கியமாக உலகம் முழுவதுமே உற்று நோக்கப்படுகிறது.

மோடி - புதின்
மோடி - புதின்

வருகையின் ஸ்பெஷல்

இதற்கு முன்பும் இந்தியா வந்திருக்கிறார் புதின். ஆனால், அவர் தற்போது வருகை தருவது சற்று கூடுதல் ஸ்பெஷல் ஆகும்.

அதாவது புதின் இதுவரை இந்தியா வந்தது எல்லாம் 'வொர்க்கிங்' மற்றும் 'அபிஷியல்' விசிட்டுகள் ஆகும். ஆனால், இப்போது வருவது 'ஸ்டேட்' விசிட்.

வொர்க்கிங் விசிட் என்றால், அது மீட்டிங், ஆலோசனை, பேச்சுவார்த்தைக்கான சின்ன பயணம் ஆகும். அபிஷியல் விசிட் என்றால், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

ஆனால், ஸ்டேட் விசிட் என்றால், சிறப்பான வரவேற்பு வழங்கப்படும். விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள் நடக்கும். ஆக, 'ஆல் இன் ஒன்'னாக ஸ்டேட் விசிட் இருக்கும். இந்த விசிட்டாக தான் தற்போது இந்தியா வருகிறார் ட்ரம்ப்.

இந்த வருகையின் இன்னொரு முக்கியத்துவம், 2021-ம் ஆண்டுக்கு பிறகு புதின் இந்தியா வருவது இதுவே முதல்முறை ஆகும். 2022-ம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி - புதின்
மோடி - புதின்

ஏன் இந்த வருகை?

இந்தியா, ரஷ்யா நீண்ட கால நட்பு நாடுகள் ஆகும். இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக்கொள்வது வழக்கமான ஒன்று தான்.

தற்போது 23-வது இந்தியா, ரஷ்யா உச்சி மாநாட்டிற்காக புதின் இந்தியா வருகிறார்.

இந்த நேரத்தில் இந்தியா, ரஷ்யா இடையே பல முக்கிய விஷயங்கள் பேசப்பட உள்ளன என்று கூறப்படுகிறது.

எண்ணெய் இறக்குமதி

கடந்த ஆகஸ்ட் மாதம், ட்ரம்ப் கூடுதல் வரியை விதித்ததை முன்னிட்டு, இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்து வருகிறது.

ஆனால், இதை தடுக்க ரஷ்யா இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதியில் அதிக சலுகைகளை தர தயாராக இருக்கிறது. இது குறித்து கண்டிப்பாக புதின் பேசலாம்.

அடுத்ததாக, ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் எரிசக்தி மற்றும் எரிப்பொருள்களை இணைந்து எடுக்க இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று முக்கியமாக கூறப்படுகிறது.

எஸ்-400
எஸ்-400

ராணுவ தளவாடங்கள்

கடந்த மே மாதம், இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த 'ஆபரேஷன் சிந்தூரில்' எஸ்-400 ஏவுகணை பங்கு மிக முக்கியமானது. இது ரஷ்யா தயாரிப்பு ராணுவ விமானம் ஆகும்.

இந்த வகையை சேர்ந்த இரண்டு ஏவுகணைகளை அடுத்த ஆண்டு நடுவில் ரஷ்யா இந்தியாவிற்கு டெலிவரி செய்ய உள்ளது.

இது குறித்தும் இந்தியா, ரஷ்யா இணைந்து ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்வது குறித்து பேசப்படும். இரு நாடுகளும் இணைந்து ராணுவ தளவாடங்களை தயாரிக்க இந்தியா மிகவும் ஆவலாக உள்ளது. அதனால், இந்தியா இதை கட்டாயம் பேச்சுவார்த்தையில் முன்னெடுத்து வைக்கும்.

புதினின் 'கிஃப்ட்'

இந்தியா, ரஷ்யா இடையே வர்த்தக பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது.

இந்தியா கிட்டத்தட்ட 65 பில்லியன் டாலர் அளவிற்கு ரஷ்யப் பொருள்களை இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதியில் கச்சா எண்ணெய் தான் மிக அதிகம்.

ஆனால், ரஷ்யாவோ இந்தியாவிடம் இருந்து வெறும் 5 பில்லியன் டாலர் அளவிற்கு தான் இறக்குமதி செய்கிறது.

இதை சமன் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதை சரிசெய்யவும், இந்தியாவில் இருந்து இறக்குமதிகளை அதிகரிக்கவும் புதின் கடந்த அக்டோபர் மாதம் தனது அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அது தற்போதைய பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருக்கும்.

ஏற்றுமதி - இறக்குமதி
ஏற்றுமதி - இறக்குமதி

ரஷ்யாவில் இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்ய ஏகப்பட்ட கெடுபிடிகள், வரிகள் உள்ளன. அது எளிதாக்கப்படும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதன் முன்னோட்டமாக, கடந்த மாதத்தில் இருந்து இந்தியாவில் இருந்து உருளைக்கிழங்கு மற்றும் மாதுளை இறக்குமதிகளை அதிகரித்துள்ளது ரஷ்யா.

இந்தியாவும் பதிலுக்கு ரஷ்ய உர இறக்குமதி அதிகரித்துள்ளது.

இவற்றை தாண்டி, ரஷ்யா இந்தியாவின் மருந்துகள் மற்றும் விவசாய பொருள்களை அதிகம் இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றது.

இதுபோக, இரு நாடுகளுமே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் போடவும் ஆர்வமாக உள்ளனர்.

பேமென்ட் சிஸ்டம்

இந்தியாவின் Rupay, ரஷ்யாவின் Mir-ஐ இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகங்களில் பயன்படுத்தவும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.

ஒருவேளை, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதாக முடிவானால், அந்த வர்த்தகத்திற்கு ரஷ்யாவின் ரூபிள் அல்லது இந்தியாவின் ரூபாயை பயன்படுத்த பேச்சுவார்த்தை நடக்கும்.

மேலும், இரு நாடுகள் இடையேயும் விசா இல்லாத பயணங்களை ஊக்குவிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடக்கலாம்.

மோடி - புதின்
மோடி - புதின்

புதினுக்கு என்ன லாபம்?

ரஷ்யா - உக்ரைன் போருக்காக, ரஷ்யாவை கடுமையாக எதிர்த்து வருகிறது ஐரோப்ப நாடுகள். புதினின் நண்பனான ட்ரம்பும் இந்தப் போரை சிறிதும் விரும்பவில்லை.

இந்த நேரத்தில் புதின் இந்தியா வருவது அவருக்கு சர்வதேச அளவில் இன்னும் செல்வாக்கு உள்ளது என்பதை வெளிக்காட்டும். ரஷ்ய மக்களுக்கும் அவர் மீது ஓரளவு நல்லெண்ணம் ஏற்படலாம்.

இந்தியாவிற்கு என்ன லாபம்?

'நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்' என்று தொடர்ந்து கூறி வருகிறார் ட்ரம்ப். இதனால், எதிர்க்கட்சிகள் இந்திய பிரதமர் மோடியை கடுமையாக சாடி வருகின்றன.

இதுபோக, இந்தியா - அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை முன்னேற்றங்களை ட்ரம்ப் தன்னிச்சையாக அறிவித்து வருகிறார். இது இந்தியாவின் வழக்கம் அல்ல. இதுவும் மோடிக்கு பெரிய அடியாக விழுகிறது.

இந்த நேரத்தில் ட்ரம்ப் தொடர்ந்து சாடி வரும் புதின் இந்தியா வருவது, இந்தியா யாருக்கும் அடிப்பணியவில்லை என்கிற பிம்பத்தைக் கட்டமைக்கும்.

மேலும், இந்தச் சந்திப்பை உலக நாடுகளும் உற்றுநோக்குகின்றன. இது இந்தியாவிற்கான மிகப்பெரிய ப்ளஸ்.

அமெரிக்கா என்ன செய்கிறது?

இதெல்லாம் சரி தான்... ஆனால், புதினின் இந்தியா வருகையை அமெரிக்கா மிகவும் கூர்மையாக கவனித்து வருகிறது.

இந்த வருகையில் எதாவது சற்று பிசகினாலும், இந்தியா, ரஷ்யா விஷயத்தில் ட்ரம்பின் அதிரடிகளை காண முடியும்.!

``திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்'' - பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?

முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்... மேலும் பார்க்க

Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா?

இனி உற்பத்தியாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் 'சஞ்சார் சாத்தி' ஆப்பை ப்ரீ-இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் - இது சமீபத்தில் வெளியான மத்திய அரசின் உத்தரவு. ஏற்கெனவே உற்... மேலும் பார்க்க

காங்கிரஸ்: ப. சிதம்பரத்தின் திட்டமும் ஐவர் குழு சந்திப்பும்; அறிவாலயத்தில் நடந்தது என்ன?!

காங்கிரஸ் Vs தி.மு.ககடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தி.மு.க, காங்... மேலும் பார்க்க