Anirudh: அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு; மோடி - சோனியா காந்தி கடிதம் மூல...
புதிய ஜேம்ஸ் பாண்டாக ராபர்ட் பேட்டின்சன்; 1960 முதல் ஜேம்ஸ் பாண்டாக நடித்தவர்கள் யார் யார் தெரியுமா?
இயக்குநர் டெனிஸ் வில்லெனுவே இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு, 1960-கள் முதல் ஜேம்ஸ் பாண்டாக நடித்த நடிகர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஜார்ஜ் லேசன்பி:
1969-இல் வெளிவந்த 'On Her Majesty's Secret Service' என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே இவர் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருக்கிறார்.
திமோதி டால்டன்:
1987 முதல் 1989 வரை வெளியான இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
பியர்ஸ் பிராஸ்னன்:
1995 முதல் 2002 வரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இவர்தான் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார்.
ஷான் கானரி:
1962 முதல் 1971 வரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இவர் நடித்திருந்தார். 'பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்' என்கிற வசனமும், இவர் நடித்த படங்கள் மூலமாகத்தான் பிரபலமானது.
ரோஜர் மூர்:
1973 முதல் 1985 வரை வெளியான 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

டேனியல் கிரெய்க்:
2006 முதல் 2021 வரை வெளியான அனைத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் இவர் நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெளிவந்த ஜேம்ஸ் பாண்ட் படங்கள் இன்னும் பெரியளவில் ரசிகர்களுக்கு நெருக்கமானது.
இவர்களைத் தொடர்ந்து நடிகர் ராபர்ட் பாட்டின்சன் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கவிருக்கிறார்.














