செய்திகள் :

'ட்விலைட்' வாம்பயர் இனி ‘007’ உளவாளி! `ஜேம்ஸ் பாண்ட்' ஆகும் ராபர்ட் பாட்டின்சன் யார் தெரியுமா?

post image

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்று, ஜேம்ஸ் பாண்ட் (James Bond) 007. இந்த ரகசிய உளவாளி கதாபாத்திரத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சீன் கானரி முதல் டேனியல் கிரெய்க் வரை பல முன்னணி நடிகர்கள் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றுள்ளனர்.

அந்த வரிசையில் அடுத்ததாக யார் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. டேனியல் கிரெய்க்கிற்குப் பிறகு அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் 'ராபர்ட் பாட்டின்சன்' தான் அடுத்த 'ஜேம்ஸ் பாண்ட்' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Robert Pattinson

ஹாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர்களில் ஒருவர் ராபர்ட் பாட்டின்சன் (Robert Pattinson). 'ட்விலைட்' திரைப்படத் தொடர் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான இவர், பின்னர் 'தி பேட்மேன்' திரைப்படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். சாதாரண நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று ஹாலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ள இவரைப் பற்றிப் பார்ப்போம்.

ராபர்ட் பாட்டின்சன் பிறப்பு மற்றும் குடும்பப் பின்னணி :

ராபர்ட் டக்ளஸ் தாமஸ் பாட்டின்சன் (Robert Douglas Thomas Pattinson) 1986-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தார். இவரது தந்தை ரிச்சர்ட் பாட்டின்சன், கார் விற்பனைத் தொழிலிலும், தாய் கிளேர் பாட்டின்சன் மாடலிங் நிறுவனத்திலும் பணியாற்றியவர்கள். இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். சிறுவயதிலிருந்தே நடிப்பு மற்றும் இசையில் ஆர்வம் கொண்டிருந்த ராபர்ட், பள்ளிப் பருவத்தில் நாடகங்களில் பங்கேற்கத் தொடங்கினார்.

 2005-ஆம் ஆண்டு வெளியான 'ஹாரி பாட்டர் அண்ட் தி கோப்லெட் ஆப் ஃபயர்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் 'செட்ரிக் டிஜிகோரி' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

Robert Pattinson

இந்தப் படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக இளம் வயதிலேயே ஹாலிவுட்டில் தனக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டார்.

உலகப் புகழைக் கொடுத்த 'ட்விலைட்' திரைப்படம்:

2008-ஆம் ஆண்டு வெளியான 'ட்விலைட்' திரைப்படம் ராபர்ட் பாட்டின்சனின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இதில் எட்வர்ட் கல்லன் என்ற வாம்பயர் கதாபாத்திரத்தில் நடித்தார். கிறிஸ்டின் ஸ்டேவார்ட் உடன் இணைந்து நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

Robert Pattinson

தொடர்ந்து வெளியான ட்விலைட் திரைப்படத் தொடர்களான ட்விலைட் (2008), நியூ மூன் (2009), எகிளிப்ஸ் (2010), பிரேக்கிங் டவ்ன் பார்ட்-1(2011), பிரேக்கிங் டவ்ன் பார்ட்-2(2012) போன்ற திரைப்படங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.

எகிளிப்ஸ் (2010), பிரேக்கிங் டவ்ன் பார்ட்-1(2011), பிரேக்கிங் டவ்ன் பார்ட்-2(2012) போன்ற திரைப்படங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்த ராபர்ட்:

 ட்விலைட் திரைப்படத் தொடர் மூலம் காதல் நாயகனாக அடையாளம் காணப்பட்டாலும், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை.அதன் காரணமாக குட் டைம் (2017), ஹை லைப் (2018), தி லைட்ஹவுஸ் (2019), டெனட் (2020) போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்தார்.குறிப்பாக 'கிறிஸ்டோபர் நோலன்' இயக்கிய 'டெனட்' திரைப்படத்தில் நீல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

 2022-ஆம் ஆண்டு வெளியான 'தி பேட்மேன்' திரைப்படம் இவரது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இயக்குநர் 'மேட் ரீவ்ஸ்' இயக்கிய இந்தப் படத்தில் புரூஸ் வேய்ன் / பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கு முன்பு பல நடிகர்கள் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், ராபர்ட் பாட்டின்சன் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அந்தக் கதாபாத்திரத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்தார்.

குறிப்பாக இருண்ட பின்னணியைக் கொண்ட, குற்றங்களைத் துப்பறியும் பேட்மேனாக இவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது.

Robert Pattinson

மிக்கி 17 – மற்றொரு வித்தியாசமான முயற்சி:

             2025-ஆம் ஆண்டு வெளியான 'மிக்கி 17' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். பாராசைட் இயக்குநர் 'பாங் ஜுன்-ஹூ' இயக்கிய இந்த அறிவியல் புனைகதைத் திரைப்படத்தில் மிக்கி பார்னேஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரே மனிதனின் பல பிரதிகள் உருவாக்கப்படும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படம் இவரது நடிப்புத் திறனுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்தது.

ராபர்ட் பாட்டின்சனின் முக்கியத் திரைப்படங்கள்:

ஹாரிபாட்டர் அண்ட் தி கோப்லெட் ஆப் ஃபயர் (2005), ட்விலைட் (2008), ரிமெம்பெர் மீ (2010), காஸ்மோபோலீஸ் (2012), குட் டைம் (2017), தி லைட்ஹவுஸ் (2019), டெனட் (2020), தி பேட்மேன் (2022), மிக்கி-17 (2025) போன்றவைகளாகும்.

Robert Pattinson

ராபர்ட் பாட்டின்சன் தனிப்பட்ட வாழ்க்கை:

ராபர்ட் பாட்டின்சன் பிரிட்டிஷ் நடிகையும் பாடகியுமான சூகி வாட்டர்ஹவுஸ் (Suki Waterhouse) உடன் நீண்டகாலமாக உறவில் இருந்து வருகிறார். இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.

நடிப்பைத் தவிர இசையிலும் ஆர்வம் கொண்ட இவர், திரைப்படங்களுக்காகப் பாடல்களையும் இசையமைத்துள்ளார்.

ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது இவருடைய தனிச்சிறப்பு. எதிர்காலத்தில் இவர் ஏற்கவிருக்கும் 'ஜேம்ஸ் பாண்ட்' கதாபாத்திரம் மற்றும் திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது!

Patrick Stewart: Star Trek, X-Men புகழ் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்

1987-ம் ஆண்டு வெளியான Star Trek: The Next Generation தொலைக்காட்சித் தொடரில் கேப்டன் ஜீன்-லூக் பிகார்டாக (Jean-Luc Picard) நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் (Pa... மேலும் பார்க்க

Clayface Review: நினைத்த உருவம் மாறும் சூப்பர்ஹீரோ/வில்லன் - கம்பேக் கொடுக்கிறதா DC யுனிவர்ஸ்?!

இழந்த புகழ் வெளிச்சத்தையும், செல்வத்தையும் மீண்டும் பெறுவதற்காக ஒருவன் செல்லும் எல்லையும், அதன் பிறகான பழிக்குப் பழி ஆட்டமுமே இந்த `க்ளேஃபேஸ்'. இயக்குநர் ஜேம்ஸ் கன் தலைமையில் புதிதாகக் கட்டமைக்கப்பட்ட... மேலும் பார்க்க