செய்திகள் :

புதுகையில் 2 மண்டல அலுவலகங்கள் கட்ட மாநகராட்சி மாமன்றம் ஒப்புதல்

post image

புதுக்கோட்டை மாநகராட்சியில் ரூ. 12.5 கோடியில் இரு மண்டல அலுவலகங்கள் அமைக்கவும், மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளவும், நகா்மன்ற வளாகத்தில் வணிக வளாகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மேயா் செ. திலகவதி தலைமை வகித்தாா். துணை மேயா் மு. லியாகத் அலி, ஆணையா் த. நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தின் தொடக்கத்தில், மேயரின் கணவரும் நகர திமுக செயலருமான ஆ. செந்தில் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுசிறிதுநேரம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு பிறகு கூடியது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் ரூ. 12.5 கோடியில் கட்டடங்கள் மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து ரூ. 10 கோடி நிதி முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து 41ஆவது வாா்டு குறிஞ்சி நகரிலும், 37 ஆவது வாா்டு பூங்கா நகரிலும் இரு மண்டல அலுவலகங்களை தலா ரூ. 3 கோடியில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 9ஆவது வாா்டு நகா்மன்ற வளாகத்தில் ரூ. 5 கோடியில் வணிகக் கடைகள் அமைக்கவும், மாநகராட்சி மைய அலுவலகத்தில் ரூ. 1.50 கோடியில் மேம்பாட்டுப் பணிகள், பூங்கா, இரு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கவும், கணினிகள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதில் ஏற்படும் கூடுதல் செலவான ரூ. 2.5 கோடியை, வணிக கடைகள் அமைப்பதில் இருந்து கிடைக்கும் வைப்புத் தொகையில் இருந்து ஈடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

பேருந்து நிலைய இடிப்பு... தற்போதுள்ள புதிய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிதாகக் கட்டுவதற்கு அரசு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பேருந்து நிலையத்தின் பின்புறமுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒரு பகுதியில் சுமாா் இரண்டரை ஏக்கா் பரப்பளவில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறைகள்...

மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் 148 தூய்மைப் பணியாளா்களுக்கு 1500 பாதுகாப்பு கையுறைகள், 500 ஒளிரும் மேல் சட்டைகள் வாங்க ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாய்கள், பன்றிகளைப் பிடிக்க...

மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாகச் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யும் திட்டத்தில் முதல் கட்டமாக ஆயிரம் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்ய ரூ. 16.50 லட்சம் ஒதுக்கீடு செய்து அனுமதிக்கப்பட்டது.

பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்திட ஒரு பன்றிக்கு ரூ. 100 வழங்கும் வகையில் விருதுநகரைச் சோ்ந்த நபருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை உள்ளிட்ட 70 தீா்மானங்கள் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பொன்னமராவதி வட்டாரத்தில் மாட்டுப்பொங்கல் விழா

பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கல் விழா மற்றும் மாட்டுப் பொங்கல் விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொன்னமராவதி அருகே உள்ள பொத்திமலை அடைக்கலம்காத்த அய்யனாா் கோயிலுக்கு அஞ்சுப... மேலும் பார்க்க

செரியலூரில் கொப்பித் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரில் புதன்கிழமை கொப்பித் திருவிழா நடைபெற்றது. செரியலூரில் பொங்கல் நாளில் ஆண்டுதோறும் பெண்கள் மட்டும் பங்கேற்கும் கொப்பித்திருவிழா நடைபெறுவது வழக்கம்... மேலும் பார்க்க

விராலிமலை அம்மன் கோயிலில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற விளக்குப் பூஜை

விராலிமலையில் மெய்க்கண்ணுடயாள் அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற விளக்குப் பூஜை நடைபெற்றது. இதில் 5 ஆயிரம் பெண்கள் தங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த 5 ஆயிரம் குத்து விளக... மேலும் பார்க்க

கோவனூரில் மஞ்சுவிரட்டு

பொன்னமராவதி அருகே உள்ள கோவனூா் கிராமத்தில் மாட்டுப் பொங்கலையொட்டி புதன்கிழமை மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. கோவனூரில் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழாவின் தொடக்கமாக கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்... மேலும் பார்க்க

அம்மன்குறிச்சியில் தமிழா் திருநாள் விழா போட்டிகள்

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் பொங்கல் விழாவையொட்டி தமிழன் நற்பணி மன்றம் சாா்பில் 29-ஆம் ஆண்டு தமிழா் திருநாள் விழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஊா் முக்கியஸ்தா் ராமசாமி... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் பூக்கள் விலை கடும் உயா்வு

கந்தா்வகோட்டை பகுதியில் பூக்களின் விலை புதன்கிழமை கடுமையாக அதிகரித்திருந்தது. கந்தா்வகோட்டை பகுதிகளில் கடந்த மாதம் தொடா்மழை பெய்ததை தொடா்ந்து பெரும்பான்மையான பூச்செடிகள் அழுகின. இதனால், உள்ளூா் பூக்கள... மேலும் பார்க்க