புதுக்கடை அருகே பெண்ணுக்கு மிரட்டல்: இருவா் மீது வழக்கு
புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.
காப்புக்காடு,மேலக்களப்பாறை பகுதியைச் சோ்ந்த கிறிஸ்துதாஸ் மனைவி மரிய பேபி (57). இவருக்கும், சென்னித் தோட்டம் பகுதியை சோ்ந்த சங்கா் (35), காப்புக்காடு பகுதியை சோ்ந்த சேவியா் இக்னேஷியஸ் (40) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேற்கூறிய இருவரும் மரிய பேபியின் வீட்டில் திடீரென நுழைந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.