செய்திகள் :

புதுக்கோட்டை: காணாமல் போன 40 பவுன் நகை; காட்டிக் கொடுத்த அடகுக்கடை சி.சி.டி.வி - என்ன நடந்தது?

post image

புதுக்கோட்டை மாவட்டம், கீமங்கலம் காவல் சரகம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி.

இவர், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா, 2 குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி கொத்தமங்கலம் பிடாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவிற்குச் சென்று இரவில் வீடு திரும்பி, தான் அணிந்திருந்த தங்க நகைகளை பெட்டியில் வைக்க பெட்டியைத் திறந்திருக்கிறார்.

அப்போது, பெட்டியில் இருந்த சங்கிலிகள், நோடுகள், மோதிரம், நெக்லஸ்கள் எனச் சுமார் 40 பவுன் தங்க நகைகளைக் காணாமல் போய் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அவர், தனது கணவருக்கும், கீரமங்கலம் காவல் நிலைய போலீஸாருக்கும் புகார் கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். தடயவியல் சோதனைகளும் நடந்தது.

accused

அதனை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஆலங்குடி டி.எஸ்.பி மனோகர், தலைமைக் காவலர் புருசோத்தமன் தலைமையில் தலைமை காவலர் கணபதி, போலீஸார்ர் முத்துக்குமார், சின்னச்சாமி ஆகியோர் கொண்ட தனிப்படை நியமித்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சில நாட்கள் தடயங்களைச் சேகரித்த தனிப்படை போலீஸாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கடந்த ஒரு வாரமாக லதா வீட்டை நோட்டடம் பார்த்தது தெரிய வந்தது. அந்த இரு இளைஞர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்த போலீசார் கொத்தமங்கலம், ஆலங்குடி பகுதியில் உள்ள நகைக்கடை, நகை அடகு கடைகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, ஆலங்குடியில் உள்ள ஒரு நகைக்கடையில் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தங்கத் தோடு, சங்கிலியை விற்கச் சென்று தோடுகளை மட்டும் விற்று பணம் வாங்கிச் செல்வது தெரிய வந்தது.

இந்நிலையில், தங்க நகைகளைத் திருடியதாக ரஞ்சித் மற்றும் கலையரசன் என்ற இரு இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 40 பவுன் நகைகள் காணாமல் போன வழக்கில் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர்: "ஒரு ருபாய் குறைந்தாலும் வேலை நடக்காது" - ரூ. 1000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ சிக்கியது எப்படி?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வெஞ்சமாங்கூடலுார் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (வயது: 36). இவர், ராஜபுரம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் ராஜபுரம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த... மேலும் பார்க்க

கரூர்: தலைமை ஆசிரியையைத் தாக்கிய ஆசிரியை; சஸ்பென்ட் செய்த அதிகாரி; வைரல் வீடியோவில் நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், சின்​னாண்​டாங்​கோ​வில் ஊராட்சி ஒன்​றி​யத் தொடக்​கப் பள்​ளி​யில் இடைநிலை ஆசிரியை​யாகப் பணிபுரிந்து வந்​தவர் கலைம​தி. இவர், சரிவர பணிக்கு வரு​வ​தில்லை என்​றும், மாணவர்​களை அடித்து துன்​ப... மேலும் பார்க்க

"மனைவி இல்லாமல் எப்படி வாழ்வேன்?" - மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் எடுத்த விபரீத முடிவு

திருச்சி மாவட்டம், துறையூர் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது: 71).இவரது மனைவி கண்ணம்மாள்.இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத சூழலில், திடீரென்று இறந... மேலும் பார்க்க

இன்ஸ்டா தோழியை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்த நபர்; உணவு ஆர்டர் செய்யும்போது சிக்கினார்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 18 வயது மாணவி 12வது வகுப்பு படித்து வருகிறார். நட்பு தினமான ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் ஒரு மாலுக்குச் செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு மாணவி தனது வீட்ட... மேலும் பார்க்க

தங்க நகை அடமானத்தில் இருந்து மீட்கக் கடன்... பீதியைக் கிளம்பும் புது வகை மோசடி... உஷாரய்யா உஷாரு!

ஒரு காலத்தில் `உங்கள் ATM கார்டு முடக்கப்படும், OTP சொல்லுங்கோ, டிஜிட்டல் அரெஸ்ட்' என்று பொதுமக்களைக் குறிவைத்து ஏமாற்றிய மோசடி கும்பல்கள், இப்போது தங்களின் இலக்கை மாற்றியிருக்கின்றன. காரணம், பொதுமக்க... மேலும் பார்க்க

கோவை: பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை; கைதான காவலர் பணியிடை நீக்கம்

திருப்பூரைச் சேர்ந்தவர் மணிவேந்தன்(32). காவலரான இவர், கோவை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட போத்தனூர் விசாரணை பிரிவு காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக உள்ளார். அவர் வேலை விஷயமாக நேற்று காலை பொள்ளாச்சிக்குச் ... மேலும் பார்க்க