செய்திகள் :

`புதுக் காதலனுடன் தனிமையில் சந்தித்ததால் ஆத்திரம்’ - திருப்பத்தூர் இரட்டைக் கொலையில் `திடுக்’ தகவல்

post image

திருப்பத்தூர் மாவட்டம், திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் திரு.வி.க நகரைச் சேர்ந்த மாலினி என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மாலினிக்கு தற்போது 31 வயது ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான 30 வயது இளைஞர் ரஞ்சித்குமார் என்பவரிடம் நெருங்கி பழகியிருக்கிறார் மாலினி. ரஞ்சித்துக்கு மாலினி அக்கா முறை உறவினர் எனக் கூறப்படுகிறது. ரஞ்சித்துக்குத் திருமணம் ஆகாத நிலையில், மாலினியிடம் அவர் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய தகாத உறவுக்கு வழிவகுத்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.

கொலைச் செய்யப்பட்ட மாலினி மற்றும் ரஞ்சித்குமார்

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையும் தனிமையில் சந்திப்பதற்காக திருப்பத்தூர் அடுத்த தோரணம்பதியில் அமைக்கப்பட்டிருக்கும் வீட்டுமனைப் பிரிவுக்கு மாலினியை காரில் அழைத்துச் சென்றார் ரஞ்சித். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர் கத்தியால் மாலினியையும், ரஞ்சித்தையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அக்ஷய் அனில் வாகரே உத்தரவின்பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலைச் செய்யப்பட்ட இருவரும் தகாத உறவில் இருந்துவந்ததாக தெரியவந்ததால், மாலினியின் கணவர் சிரஞ்சீவியிடம் இருந்து விசாரணையைத் தொடங்கினர்.

தற்போது கொலைச் செய்யப்பட்ட ரஞ்சித்தை தவிர்த்து மேலும் ஒருவருடனும் மாலினிக்கு தகாத தொடர்பு இருந்ததாக கணவரே தெரிவித்திருக்கிறார். விசாரணையில் அவர் செங்கம் திரு.வி.க நகரைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியான சஞ்சீவி காந்தி (வயது 35) எனத் தெரியவந்தது. சஞ்சீவி காந்தியை கைது செய்து விசாரித்தபோது, அவர் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதாவது, கொலையாளி சஞ்சீவி காந்தியும் கொல்லப்பட்ட மாலினியும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். மாலினி பள்ளியில் படிக்கும் காலத்தில் சஞ்சீவி காந்தியை காதலித்திருக்கிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில், மாலினிக்கு அவரது பெற்றோர் திருப்பத்தூரைச் சேர்ந்த சிரஞ்சீவிக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

ஆனாலும், காதலி மாலினியை மறக்க விரும்பாத சஞ்சீவி காந்தி திருமணம் செய்துகொள்ளாமல், வேறொருவரின் மனைவியான பின்னரும் மாலினியிடம் காதலை ரகசியமாக தொடர்ந்திருக்கிறார். இவருடனும் மாலினி தனிமையில் சந்திப்பை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். இந்த நிலையில்தான் சஞ்சீவி காந்தியிடம் மாலினி பேசுவதை தவிர்த்து, அவர் போன் செய்தாலும் எடுக்காமல் இருந்திருக்கிறார். இதனிடையே, கார் ஓட்டுநர் ரஞ்சித்துடன் மாலினிக்கு தொடர்பு ஏற்பட்டதையும், அவருடனும் மாலினி தனிமையில் சந்திப்பதையும் நோட்டமிட்டு தெரிந்துகொண்டிருக்கிறார் சஞ்சீவி காந்தி. ரஞ்சித்திடம் பேசுவதை தவிர்க்குமாறும் கூறி மாலனியை சஞ்சீவி காந்தி எச்சரித்து வந்திருக்கிறார்.

சஞ்சீவ் காந்தி

இந்த நிலையில்தான் சம்பவத்தன்று ரஞ்சித் காரில் மாலினியை சந்திப்பதற்காக திருப்பத்தூர் செல்லும் தகவலை தெரிந்துகொண்ட சஞ்சீவி காந்தி அவரை பைக்கில் பின்தொடர்ந்திருக்கிறார். திருப்பத்தூரில் மாலினியை காரில் ஏற்றிக்கொண்ட ரஞ்சித் சம்பவ பகுதிக்கு சென்று காரை நிறுத்தியபோது, பின்தொடர்ந்துச் சென்ற சஞ்சீவி காந்தி கத்தியால் ஆத்திரம் தீரும் வரை கொடூரமாக குத்தி இருவரையும் கொன்றதாக தெரியவந்திருக்கிறது. விசாரணைக்குப் பின்னர் கொலைக் குற்றவாளியான சஞ்சீவ் காந்தியை வேலூர் மத்தியச் சிறையில் போலீஸார் அடைத்திருக்கின்றனர்.

"என் சாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ தான் காரணம்"- கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த டிரைவர்!

கன்னியாகுமரி அருகே வட்டக்கோட்டை - பால்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சுதாகர். லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் சந்தேகம்; பள்ளி மாணவியைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகிலுள்ள செபத்தையாபுரம், சோலைபுதூர் வேதமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசிபாண்டியன். இவரது மகன் முத்துராஜ். இவர் செபத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டற... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: நகைக்காக தாயைக் கொன்ற மகள் கைது - ஆண் நண்பரிடமும் போலீஸ் தீவிர விசாரணை!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்திருக்கும் தென்கடப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண் கீதா. இவரது கணவர் ரவி, லாரி ஓட்டுநராக சென்னையில் வேலைச் செய்து வருகிறார். இவர்களுக்கு சரண்யா, சுக... மேலும் பார்க்க

ரயில் பெட்டிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை... கொலை - தனியாகச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி நாகர்கோவில் வந்த பயணிகள் ரயிலில் ஹேண்ட்ப்ரேக் பழுதானதால் சரி செய்வதற்காக ரயில் நிலைய யார்டில் நிறுத்தி சரி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோட... மேலும் பார்க்க

நெல்லை: படிக்கட்டில் இறந்து கிடந்த சிசு; கர்ப்பத்தை மறைத்து இளம்பெண்ணுக்கு திருமணம் - நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகிலுள்ள அரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தாழையூத்து அருகிலுள்ள ஏரான்குடியைச் சேர்ந்த பிச்சம்மாள் என்பவருக்கும் கட... மேலும் பார்க்க

குமரி: சிறுமியை கடத்தி யாசகம் எடுக்க வைக்க முயன்ற தாய்மாமன் - அதிரடியாக கைது செய்த போலீஸார்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் குடும்பம் குடும்பமாக சுற்றி திரியும் யாசகர் சிலர் இரவு நேரம் குளச்சல் காவல் நிலையம் எதிரே செயல்பட்டு வரும் ஆவின் பாலகம் அருகே படுத்து தூங்குவது வ... மேலும் பார்க்க