செய்திகள் :

புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமியின் கொலை - தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது ஏன்?

post image

புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த 2024 மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு அதே பகுதியிலுள்ள கழிவு நீர் வாய்க்காலில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் உடல் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யக் கூடாது என்றும், ஜிப்மர் மருத்துவமனையில்தான் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

அதையடுத்து சிறுமியின் உடல், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஒன்பது வயது சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த புதுச்சேரியையும் போராட்டக்களமாக மாற்றியது.

புதுச்சேரி சிறுமி வழக்கு | கருணாஸ், விவேகானந்தன்
புதுச்சேரி சிறுமி வழக்கு | கருணாஸ், விவேகானந்தன்

முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீஸார், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். எம்.பி கனிமொழி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி ராகுல் காந்தி வரை கண்டனம் தெரிவித்ததால், தேசிய அளவில் கவனம் பெற்றது சிறுமியின் கொடூரக் கொலை. 

சிறுமியின் உடற்கூராய்வு நடைபெற்ற ஜிப்மர் மருத்துவமனை தொடங்கி, புதுச்சேரி முழுவதும் தன்னெழுச்சியாக சிறுமிக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்தன. முத்தியால்பேட்டை, கோட்டக்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள், தாங்களாகவே கடைகளை அடைத்தனர்.

கிராமப்புறப் பகுதிகளில் தங்கள் பெண் குழந்தைகளுடன், கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை செல்போன்களில் ஏந்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. 

புதுச்சேரி, தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் என்ற முதியவரும், கருணாஸ் என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கஞ்சா மற்றும் மது போதையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதன்பிறகு கொலை செய்து வாய்க்காலில் வீசியது தெரிய வந்தது.

வழக்கு விசாரணையில் இருக்கும்போதே கடந்த 2024-ம் ஆண்டு விவேகானந்தன் சிறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதையடுத்து அவரை வழக்கிலிருந்து விடுவித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம், கருணாஸ் மீதான வழக்கை மட்டும் விசாரணை செய்தது.

கருணாஸ் மீது போலீஸார் சுமத்திய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது போக்சோ நீதிமன்றம்.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

அந்தத் தீர்ப்பை உறுதி செய்வதற்காக, கருணாஸ் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் தன்னுடைய தூக்கு தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் கருணாஸ்.

அவரது மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர் அமர்வு விசாரணை செய்து வந்தது. நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ``கருணாஸ் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலைக் குற்றச்சாட்டு எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் போக்சோ சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் கருணாஸ் அவர்களுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கிறோம்” என்று தீர்ப்பளித்தனர்.

பாபநாசம்: மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற எஸ்.எஸ்.ஐ; டிராக்டர் மோதியதில் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர், கோடுகிழி பகுதியில் விதியை மீறி இரவு நேரத்தில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மெலட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு... மேலும் பார்க்க

குடியாத்தம்: யானை தந்தங்களைக் கடத்திய 3 பேர் கைது - வனத்துறையினர் தீவிர விசாரணை!

ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக யானை தந்தங்கள் கடத்தி வரப்படுவதாக குடியாத்தம் வனச்சரக அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துற... மேலும் பார்க்க

வயதை மறைத்து ஆன்லைனில் நட்பு: உண்மை தெரிந்ததும் பிளாக் செய்த சிறுமி... தேடி அமெரிக்கா சென்றவர் கைது!

மும்பையைச் சேர்ந்த பிரீத் பங்கஜ் ஜெயின்(31) என்பவருக்கு மைனர் பெண் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. சமீபத்தில் அப்பெண்ணுக்கு பிரீத் பங்கஜ் ஜெயின் வயது குறித்த உண்மை தெரிய வந்தது. உடனே... மேலும் பார்க்க

லால்குடி: ஸ்டேஷனில் கத்தியைக் காட்டி போலீஸுக்குக் கொலை மிரட்டல் - இளைஞர் கைது!

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கல்லக்குடி அருகே உள்ள மால்வாய் சாலையில், கல்லக்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சோபியா தலைமையிலான போலீஸார் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,... மேலும் பார்க்க

தலைக்கேறிய மது போதை... சொந்த வீட்டையே எரித்த இளைஞர்! - குளித்தலை அதிர்ச்சி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சிவாயம் ஊராட்சி, குப்பாச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சிறும்பாயி. இவர்கள், அப்பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்... மேலும் பார்க்க

ஊட்டி: ரத்த தான முகாமில் சாதி கேட்கப்பட்ட அதிர்ச்சி - ரத்தம் தர மறுத்து வெளியேறிய‌ மாணவர்கள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில் சுகாதாரத்துறை சார்பில் ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ, மாணவி்கள் பங்கேற்று ரத்த தானம் செய்துள்ளனர். இந்த ரத்த த... மேலும் பார்க்க