புயல் எச்சரிக்கை: பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல்
ஃபென்ஜல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் வனச் சுற்றுலா மையம் சனிக்கிழமை மூடப்பட்டது.
சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் இயற்கைச் சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை மாங்குரோவ் தாவரங்கள் நிறைந்துள்ளன. இதனால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து, படகு சவாரி செய்து இயற்கை அழகை கண்டு கழித்து செல்வா்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிச்சாவரம் வனச் சுற்றுலா மையம் சனிக்கிழமை மூடப்பட்டது. மேலும், படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.