செய்திகள் :

``புலிக்கு வாலாக இருக்கலாம் எலிக்கு தலையாக இருக்கக் கூடாது; எலி எந்தக் கட்சினு" - அதிமுக ஜெயக்குமார்

post image

அதிமுக மூத்த தலைவரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவருமான செங்கோட்டையன் இந்த மாத தொடக்கத்தில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையால் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். அவரைத்தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களும் சிலர் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டனர்.

நீக்கப்பட்ட பிறகு மூன்று வாரங்களாக அமைதியாக இருந்த செங்கோட்டையன் நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

அதில் இணைந்த பிறகு ``இனி உயிர் மூச்சுள்ளவரை த.வெ.க-வுக்குப் பணியாற்றுவேன்" என்றும், ``மக்கள் சக்தியோடு 2026-ல் தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் அரியணையில் அமர்வார்" என்றும் செங்கோட்டையன் கூறி வருகிறார்.

த.வெ.க-வில் இணைந்த செங்கோட்டையன்
த.வெ.க-வில் இணைந்த செங்கோட்டையன்

இந்த நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புலிக்கு வாலாக இருக்கலாம் ஆனால் எலிக்கு தலையாக இருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், செங்கோட்டையனைத் தொடர்ந்து தாங்களும் த.வெ.க-வில் இணையப்போவதாக இணையத்தில் பரவுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ``எனக்கு சிரிப்புதான் வருது. அண்ணன் செங்கோட்டையன் நான் பெரிதும் மதிக்கக்கூடியவர். அவர் ஒரு முடிவெடுத்து த.வெ.க-வில் சேர்ந்திருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க.

உடனே சமூக ஊடகங்கள்ல செங்கோட்டையனை அடுத்து ஜெயக்குமாரும் போறார்னு செய்தி. ஜெயக்குமாரைப் பொறுத்தவரையில் நேற்று இன்று நாளை ஒரே கட்சிதான்.

செத்தாலும்கூட என் உடல்மீது அ.தி.மு.க கொடியோடுதான் போவேன். யார் வீட்டு முன்னாடியும் காத்திருப்பவன் இந்த ஜெயக்குமார் கிடையாது.

பொதுவாகவே என்னுடைய மனநிலை, புலிக்கு வாலாக இருக்கலாம் ஆனா எலிக்கு தலையாக இருக்கக்கூடாது. புலி என்பது அ.தி.மு.க, எலி எந்தெந்த கட்சினு உங்க யூகத்துக்கே விட்டுட்றேன்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதனால, புலிக்கு வாலாக இருக்கிறததான் என் வாழ்நாள்ல பெருமையாய் நினைக்றேன். எலிக்கு தலையா இருந்து எந்த பிரயோஜனமும் கிடையாது. எனவே அது நடக்காத விஷயம்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்டெடுத்த இயக்கத்தில் இருப்பதுதான் என் வாழ்நாள் பெருமை.

சபாநாயகர் அரியாசனம், அதுக்கப்றம் நிதியமைச்சர்னு 15-க்கும் மேற்பட்ட துறைகள், கட்சியில் தலைமை நிலைய செயலாளர், 3 முறை மாவட்ட செயலாளர், மீனவர் பிரிவு செயலாளர்னு இதெல்லாம் எவ்வளவு பெரிய பெருமைகள்.

இந்தப் பெருமையோடு வாழ்நாள் முழுவதும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி புகழ் பாடும் வானம்பாடியாகத்தான் இருப்பேன். யார் வீட்டு கதவையும் தட்டுற ஆள் இந்த ஜெயக்குமார் கிடையாது" என்று கூறினார்.

திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" - அண்ணாமலை

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய... மேலும் பார்க்க

Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரச... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில... மேலும் பார்க்க