செய்திகள் :

புளிய மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு - பசுமைப் பரப்பை அதிகரிக்க ஆர்வம் காட்டும் வேலூர் இளைஞர்!

post image

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள கீராம்பாடி கிராமத்தில் `குறுங்காடு’ உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இயற்கை தன்னார்வலரும் வேலூரைச் சேர்ந்தவருமான தினேஷ் சரவணன். இதற்காக, ஊராட்சி நிர்வாகம் மூலம் வெட்டவெளி பகுதியை தேர்வுசெய்து, கிராம மக்கள் உதவியுடன் புளிய மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கியிருக்கிறார் தினேஷ் சரவணன்.

மொத்தமாக 1,000 மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், முதற்கட்டமாக 100 புளிய மரக்கன்றுகளை நட்டு, அதற்கான தண்ணீர் வசதியையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். பூமி பூஜை செய்து இயற்கையை வழிபட்ட பிறகு மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்த தினேஷ் சரவணன், பசுமைப் பரப்பை அதிகரித்து சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும் தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.

குறுங்காடு உருவாக்கும் முயற்சி

அதேபோல, வேலூர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி காலனியில் அமைந்திருக்கும் மாநகராட்சி பூங்காவிலும் கல்லூரி மாணவ - மாணவியரைக் கொண்டு பூவரசம், நாவல் போன்ற 100 மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் பாய்ச்சுவதற்கான குழாய் இணைப்பு செலவுகளையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார் தினேஷ் சரவணன். பூங்காவில் நடப்பட்ட மரக்கன்றுகள் அனைத்துமே 5 அடி உயரம் வளர்ந்தவை. மருத்துவ குணம் மற்றும் நிழல் தரக்கூடியவையாகும். இதேபோல, மாநகராட்சியிலுள்ள மற்ற பூங்காக்களிலும் மரக்கன்றுகளை நடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் தினேஷ் சரவணன்.

கோவை: கூண்டில் சிக்காமல் போக்கு காட்டிய காட்டுப்பன்றிகள்; சுட்டுக் கொன்ற வனத்துறை

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது... மேலும் பார்க்க

Ooty: பூச்சிகளால் முடங்கும் இயல்பு வாழ்க்கை; கடையடைப்பு போராட்டம்; என்ன நடக்கிறது ஊட்டியில்?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப்‌ பகுதிகளில் புதிதாக பூச்சியினம் ஒன்று குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. ஒவ்வொரு வீடுகளிலும் லட்சக்கணக்கில் படையெடுக்கும் ... மேலும் பார்க்க

கருமந்தி: மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர் வனத்தில் அரிதாக காணப்படும் கருங்குரங்குகள் | Photo Album

மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் கருங்குரங்குகள்கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கர... மேலும் பார்க்க

Kurinji: 'நீலக் கம்பளம் விரித்தார் போல்...' - பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்!

நீலக்குறிஞ்சி மலர்கள் (Strobilanthes)‌ மலையெங்கும் பூத்துக்குலுங்கி நீல நிறத்தில் காட்சியளிப்பதாலேயே நீலகிரி என்று காரணப்பெயரை கொண்டிருக்கிறது நீலகிரி மலை. குறிஞ்சி மலையான இங்கு ஆண்டுக்கு ஒருமுறை பூக்... மேலும் பார்க்க

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் அதிகளவில் அரிதான நீர் வாத்துகள் | Photo Album

கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வ... மேலும் பார்க்க

திருச்சி தீரன்நகர்: குவியும் குப்பை... பாழாகும் கோரையாறு - சுகாதார சீர்கேட்டுக்கு தீர்வு காணப்படுமா?

திருச்சி தீரன்நகர் பகுதியில் சுமார் 2,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதியை முக்கிய சாலையுடன் இணைக்கும் பாலம், அப்பகுதி மக்களின் அன்றாட போக்குவரத்துக்கும், அருகிலுள்ள தமிழ்நாடு அரசு பஸ் டிப்போ... மேலும் பார்க்க