'நான் தமிழ் ஈழப்பெண்'- நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு! ...
'பெங்களூரு வரும் MLA-க்கள் இருதிருமணம் செய்து கொள்கிறார்கள்' - முதல்வர் சிவ்குமார் சர்ச்சை பேச்சு
பெங்களூருவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து சட்டப்பேரவையில் கர்நாடகா முதல்வர் சிவக்குமார் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் சட்டமன்றத்தில்,''பெங்களூரு வரும் மக்கள் பெங்களூருவிலேயே தங்க முனைகின்றனர். பெங்களூருக்கு வரும் எம்.எல்.ஏ.க்கள் திரும்பிச் செல்வதில்லை. பெங்களூரு வரும் எம்.எல்.ஏ.க்கள் இரண்டு முறை திருமணம் செய்து கொள்கிறார்கள். இதுபோன்ற 12க்கும் மேற்பட்டவர்கள் பட்டியலை என்னால் கொடுக்க முடியும். நான் உங்களுக்கு உதாரணங்களைச் சொல்ல முடியும். யாரும் பெங்களூரை விட்டு வெளியேற மாட்டார்கள். தார்வாட், தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பெயரை உதாரணமாக குறிப்பிடலாம்.
பெங்களூருவுக்கு வரும் வழக்கறிஞர்கள் கூட சொந்த இடங்களுக்குச் செல்வதில்லை. அதனால்தான் நகரின் மக்கள் தொகை இப்படி இருக்கிறது''என்று குறிப்பிட்டார்.

முதல்வர் சிவக்குமார் எம்.எல்.ஏ.க்களுக்கு இரண்டு மனைவி இருப்பதாக குறிப்பிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் அசோகா கூறுகையில்,'' முதல்வரின் கருத்து தேவையில்லாதது.
எந்த எம்.எல்.ஏவுக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர் என்ற பட்டியலை அவர் வெளியிட வேண்டும். இப்போது, மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து பெங்களூருக்கு வந்த ஒவ்வொரு எம்.எல்.ஏ. மீதும் ஒரு வாள் தொங்குகிறது. சிவகுமாரின் கருத்து முதலில் நகரத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பொருந்தும்''என்று தெரிவித்தார்.
பாஜக மூத்த எம்எல்ஏ எஸ் சுரேஷ் குமாரும் முதல்வரின் கருத்தை விம்ர்சித்துள்ளார். இந்த கருத்தை சிவக்குமார் மறைமுகமாக கூறியிருக்கலாம். சட்டமன்றத்தில் இருந்து இதுபோன்ற கருத்துக்களை கூறுவது அதன் கண்ணியத்திற்கு நல்லதல்ல. சிவக்குமாரின் அறிக்கை மக்களிடையே ஆரோக்கியமற்ற ஆர்வத்தை உருவாக்கிவிட்டது. இரண்டு திருமணங்களைச் செய்து இரண்டு குடும்பங்களைப் பராமரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை முதல்வர் வெளியிடவேண்டும்"என்று வலியுறுத்தினார்.
















