செய்திகள் :

"பெண்களை வெறும் உடலாக மட்டும் பார்ப்பதே RSS, BJP-இன் சித்தாந்தம்" - நயினார் மீது ஜோதிமணி காட்டம்

post image

"பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சித்தாந்தத்தின் வெளிப்பாடே இது. பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில்,

"பொதுவாழ்வில் ஒரு கட்சித் தலைவர் மீது உங்களுக்கு விமர்சனங்கள் இருந்தால் கருத்து ரீதியாக அவரை எதிர்கொள்ளுங்கள். விமர்சனம் செய்யுங்கள்.

அதைச் செய்ய முடியாமல் ஒரு பெண்ணை ஆபாசமாகப் பொதுவெளியில் பேசுவது பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம், பார்க்கலாம், விமர்சிக்கலாம் என்கிற ஆபத்தான, அருவருக்கத்தக்க மனநிலையின் உச்சம். கடுமையான கண்டனத்துக்குரியது.

கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சித்தாந்தத்தின் வெளிப்பாடே இது. பா.ஜ.க மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா: "20 வருடங்கள் அமெரிக்கா பாதுகாப்பு தர வேண்டும்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போர் முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. போர்க்களத்தில் மோதல்கள் நீடித்தாலும், மறுபுறம் தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.... மேலும் பார்க்க

கோவையில் செந்தில் பாலாஜியை முந்திய வேலுமணி; ஹாட் பாக்ஸுடன் இறங்கிய அதிமுக; வீடு தேடி வரும் பரிசுகள்

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிடினும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகதான் வென்றது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அத... மேலும் பார்க்க

Vijay: "அவரைப் பார்த்துதான் அண்ணாவே திமுகவை ஆரம்பித்தார்" - விஜய் பற்றிய கேள்விக்கு உதயநிதி பதில்

கடந்த வாரம் விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதை நடத்திய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.அப்போ... மேலும் பார்க்க

இலவச சட்ட சேவை பெறும் உரிமை எல்லோருக்கும் உண்டு; ஆனால் எப்படி? | How To?

'நீதிமன்றம்' என்பது பொதுவானதுதான் என்றாலும், அதன் வாசல் ஏறி நீதி கோருவதற்கு இங்கு பொருளாதாரமும், அறியாமையும் பெரிய தடையாய் இருக்கின்றன. அதன் காரணமாகவே, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையி... மேலும் பார்க்க

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? - சு.வெ

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், "விகடனுடைய 'பெருந்தமிழர்' விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின... மேலும் பார்க்க

``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்... மேலும் பார்க்க