செய்திகள் :

"பெண் கலெக்டர் விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்?" - அண்ணாமலை கேள்வி

post image

கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியதாவது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரை, மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான உரிமையை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஒரு மாநில அரசுக்கு அந்தத் தீர்ப்பு ஏற்புடையதோ இல்லையோ, நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

கடந்த காலங்களில் தி.மு.க-வின் கொள்கை கடவுள் மறுப்பாக இருந்ததால், அவர்கள் அதை ஏற்கவில்லை. ஆனால், இன்று ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகமும், அதன் தலைவரும் இன்றைய முதல்வருமான விஜய் அவர்களும் அதே நிலைப்பாட்டை எடுப்பது ஏற்புடையதல்ல. தேர்தல் நேரத்திலும் சரி, முதல்வரான பிறகும் சரி, இதுகுறித்து அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார்.

இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் அண்ணன், தம்பிகளாக மத நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகின்றனர். தேவையில்லாத வரலாற்றையும், புதுப்புது குழப்பங்களையும் ஏற்படுத்தி மக்களிடையே பகைமையை ஆளுங்கட்சியினர் விதைக்கக் கூடாது.

இதனால் காவல் துறையினருக்குத்தான் தேவையற்ற மன அழுத்தமும், நெருக்கடியும் ஏற்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, மனுதாரர்கள் 20 அல்லது 50 பேரை அனுமதித்து தீபத் தூணில் தீபம் ஏற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணாமலை
அண்ணாமலை

ஒருபக்கம் 15 லட்சம் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி, குழந்தைகள் தினத்தை முதல்வர் கொண்டாடுவது வரவேற்கத்தக்கது. ஆனால், மறுபக்கம் செஞ்சியில் 7 வயது சிறுமி மாயமாகி 35 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு செய்தும் முன்னேற்றம் இல்லை.

சட்டப்படி 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மாநில அரசின் சொத்து. அவர்களைப் பாதுகாப்பது அரசின் முதல் கடமை. சட்டம் - ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி, தமிழகத்தின் தலைசிறந்த அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து, போர்க்கால அடிப்படையில் சிறுமியை மீட்க வேண்டும். இல்லையெனில், இவ்வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க முதல்வர் முன்வர வேண்டும்.

ஒரு மாவட்டத்தின் முதல் குடிமகனான மாவட்ட ஆட்சியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால், அது தலைமைச் செயலாளர் வழியாகவே செல்லும்.

இவ்வளவு பெரிய விவகாரத்தில், இது உண்மையா, பொய்யா எனத் தெரிவிக்காமல் முதல்வர், தலைமைச் செயலாளர் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சங்கத் தலைவர் ஆகியோர் மவுனம் காப்பது புரியாத புதிராகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது. இதுகுறித்து முதல்வர் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்” என்றார்.

ம.பி., புலிகள் சரணாலய அதிகாரி வீடு, அலுவலகத்தில் ரெய்டு; 2.5 கிலோ தங்கம் உட்பட ரூ. 7.5 கோடி பறிமுதல்

மத்தியப் பிரதேசத்தில் சஞ்சீவ் குமார் சர்மா என்பவர் பச்மர்கியில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக மாநில லோக... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் தூண்: "வருடம் ஒரு நாள் தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்னை?" - அண்ணாமலை

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக 'We The Leaders' அமைப்பு தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது..."திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திக... மேலும் பார்க்க

மேகதாது அணை: நாளை டெல்லி செல்லும் விஜய்; "காங்கிரஸ் தலைமையிடம் பேசுங்கள்" - பழனிசாமி வலியுறுத்தல்

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுத்து வரும் முயற்சிகளைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் காங்கிரஸ் தலைமையிடம் பேசுமாறு வலியுறுத்தி உள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசா... மேலும் பார்க்க

மரண தண்டனைக்குத் தடை கோரும் ஐ.நா. தீர்மானம்; இந்தியா எதிர்த்து வாக்களிக்க காரணம் என்ன?

மரண தண்டனைக்குத் தற்காலிகத் தடை விதிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் ஒருமித்த கருத்த... மேலும் பார்க்க

பயிற்சி பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறல்? DYFI போராட்டம்; அரசு டாக்டர் கைதான பின்னணி என்ன?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் குமாரபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் கே.எம்.பினு. பேரூர்க்கடை மாவட்ட மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவந்த இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நெடுமங... மேலும் பார்க்க

"Online டெண்டர் வேண்டாம் என்பது சட்டவிரோதம்"- ஊழியர் சங்கம்; என்ன நடக்கிறது ஊரக வளர்ச்சித் துறையில்?

அரசுப் பணிகளுக்கு டெண்டர் விடும்போது நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க ஆன் லைனில் (மின்) மட்டுமே டெண்டர் விட வேண்டுமென 2023 ம் ஆண்டு அரசாணை வெளியிட்டிருந்தது தமிழக அரசு. ஆனால் அதை மதிக்காமல் தற்போது மேனுவ... மேலும் பார்க்க