செய்திகள் :

பெரம்பலூா் எஸ்.பி அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம்

post image

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்ட அரங்கில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளை ஆய்வு மேற்கொண்டு, புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை தெரிவித்து, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளைக் கையாள்வது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கு ஆலோசனை தெரிவித்தாா்.

இக் கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் டி. மதியழகன் (தலைமையிடம்), எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் காமராஜ் மற்றும் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், நீதிமன்றக் காவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் அருகே 20 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீஸாா் வாகனத் தணிக்கை மற்ற... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் பேரணி

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா். மதுரையில் நடைபெறும் அக்கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மற்றும் விடுதலைப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்த அறிவுறுத்தல்

பெரம்பலூா் நகரில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், உண்ணாவிரதம் ஆகியவற்றை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் உ... மேலும் பார்க்க

வெளிவரத்து, விளைச்சல் அதிகம்: தக்காளி விலை வீழ்ச்சி

தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்! -பெ. சண்முகம்

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக மத்திய அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். பெரம்பலூரில் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே அழுகிய ஆண் சடலம் கண்டெடுப்பு!

பெரம்பலூா் அருகே அழுகிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. பெரம்பலூா் அருகேயுள்ள வடக்குமாதவி ஊராட்சிக்குள்பட்ட கீழக்கரை கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் என்பவருக்குச் ... மேலும் பார்க்க