செய்திகள் :

'பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய்!' - எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் யார்? முழு விவரம்

post image

தவெக தலைவர் விஜய் பெரம்பூரிலும் திருச்சி கிழக்கிலும் போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பெரம்பூர் தொகுதியில் விஜய் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

விஜய்
விஜய்

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கி ஏப்ரல் 6 வரை நடக்கிறது. அரசு விடுமுறைகளையெல்லாம் தவிர்த்து 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

இதனால் வேட்புமனு தாக்கலுக்கான முதல் நாளான இன்றே பலரும் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தனர். முதல்வர் ஸ்டாலினும் இன்று கொளத்தூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்தவகையில் தவெக தலைவர் விஜய்யும் அவர் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

விஜய்
விஜய்

பெரம்பூரில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், நேராக தனது தொகுதியிலிருந்தே பிரசாரத்தை தொடங்குகிறார்.

பெரம்பூர் விவேகானந்தர் சாலை, கொளத்தூர், வில்லிவாக்கம் என மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்யவிருக்கிறார்.

பெரம்பூரில் விஜய்யை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் திலகபாமா, நாதக சார்பில் வெற்றி தமிழன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க