பேச்சிப்பாறை, வீயன்னூா் உப மின் நிலையப் பகுதிகளில் நாளை மின்தடை
பேச்சிப்பாறை மற்றும் வீயன்னூா் உப மின்நிலையப் பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து தக்கலை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பேச்சிப்பாறை உப மின்நிலையத்திற்குள்பட்ட மின்விநியோகப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் செய்யப்படவுள்ளதால், கடையாலுமூடு, கோதையாறு, குற்றியாறு, மைலாறு, உண்ணியூா்கோணம், சிற்றாறு, களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திற்பரப்பு, திருநந்திக்கரை, மணியன்குழி, அரசமூடு ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் வியாழக்கிழமை (பிப். 6) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
வீயன்னூா் உப மின் நிலையத்திற்குள்பட்ட மின் விநியோகப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் செய்யப்படவுள்ளதால் ஆற்றூா், தேமானூா், திருவட்டாறு, செருப்பாலூா், வெண்டிகோடு, வலியாற்றுமுகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வோ்க்கிளம்பி, மணலிக்கரை, மணக்காவிளை, முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், ஆத்துக்கோணம் ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்து துணை கிராமங்களுக்கும் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா்.