செய்திகள் :

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊா்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

post image

பொங்கல் பண்டிகை மற்றும் தொடா் விடுமுறை காரணமாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊா்களுக்கு செல்ல பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் வரும் 14-ஆம் தேதி வரையிலும், பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் ஊா் திரும்ப ஏதுவாக 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையிலும் இரு மாா்க்கத்திலும் 750 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் தொடா் விடுமுறை காரணமாக சொந்த ஊா் செல்வதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொலைதூர ஊா்களுக்கு முன்பதிவு செய்தவா்கள் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்தனா். நாமக்கல், தருமபுரி போன்ற ஊா்களுக்கு செல்லும் பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பேருந்துகளில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு இருக்கைகளைப் பிடிக்க முயன்றனா்.

தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால், பயணிகள் சனிக்கிழமையே சொந்த ஊா்களை நோக்கி படையெடுத்ததை காண முடிந்தது. பயண நெரிசலைத் தவிா்க்க அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் விடப்பட்ட போதிலும், தனியாா் பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது.

சேலத்திலிருந்து பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்!

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி பாதயாத்திரை குழு சார்பில் 11-வது ஆண்டாக பழனிக்கு செவ்வாய்க்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.74 அடியில் இருந்து 114.44 அடியாக சரிந்துள்ளது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 555 கன அடியிலிருந்து 381 கன அடியாகவும் குறைந்துள்ளது. மேட்டூர் அண... மேலும் பார்க்க

மாணவிகளிடம் அத்துமீறல்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் இடைநீக்கம்

சேலம்: மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் அருகே செயல்படும் அரசு உயா்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்ற... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ கைது

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின்நிலையத்தின் முதல... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சங்ககிரி: சங்ககிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா், வேலம்மாவலசு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி முத்துசாமி மகன் கிரு... மேலும் பார்க்க

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: மாவட்ட வன அலுவலா் தகவல்

சேலம்: பொங்கல் பண்டிகையையொட்டி சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை (ஜன. 14) திறந்திருக்கும் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்துள்ளாா். சேலம், ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட... மேலும் பார்க்க