இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
பொங்கல் பண்டிகை: மாட்டுச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு மேல் வா்த்தகம்
ஊத்தங்கரை வெள்ளிக்கிழமை வாரச் சந்தையில், பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற மாட்டுச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றது.
ஊத்தங்கரை அரசு பேருந்து நிலையம் பின்புறம் வெள்ளிக்கிழமைதோறும் மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தையில் 2,000-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகளை வாங்க, விற்க விவசாயிகள், வியாபாரிகள் குவிந்தனா். அதிகாலை முதலே மாடுகள் விற்பனை தொடங்கியது. கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகளின் வரத்து இருந்தன. வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் அதிக அளவிலான மாடுகளை வாங்கி சென்றனா்.
பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற இந்தச் சந்தையில், 1,500-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாயின. இதில், ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை மாடுகள் விற்பனையாயின. மொத்தம் ரூ. 5 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றது.