பொதுக்கூட்டம், ஆா்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை
சேலம் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான இடங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனுமதி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில், மாநகரக் காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபிநபு முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள், போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பொதுக்கூட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள் நடத்திடும் வகையிலும், கடந்த கால நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டும் இடங்கள் தோ்வு செய்யப்படுகின்றன.
இக் கூட்டத்தில் மாநகராட்சி, ஊரகப் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள் நடத்துவதற்காக காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகளால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகா்களுடன் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், மேட்டூா் சாா் ஆட்சியா் நே. பொன்மணி, மாநகரக் காவல் துணை ஆணையா் வேல்முருகன், வருவாய் கோட்டாட்சியா்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வருவாய்த் துறை, காவல் துறை அலுவலா்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.