செய்திகள் :

பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடத்திய ரசிகர் மன்றம்; வாழ்த்திய விஜய் சேதுபதி

post image

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

தவெக ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து, "இந்தக் கருத்துகள் குறிப்பிட்ட எந்த ஒரு நபரையோ அல்லது அரசியல் இயக்கத்தையோ சுட்டிக்காட்டிப் பேசப்படவில்லை" என விளக்கம் அளிக்கப்பட்டது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

இந்தச் சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில், தனது அகில இந்திய விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய தலைமை ஒருங்கிணைப்பாளராக பிரசாத் என்பவரை விஜய் சேதுபதி நியமித்திருந்தார்.

மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்தல், மாவட்ட மற்றும் மண்டல அளவிலான அமைப்புப் பணிகளை வலுப்படுத்துதல், புதிய நிர்வாகிகளை நியமித்தல், உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துதல் போன்ற பொறுப்புகளை விஜய் சேதுபதி புதிய தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரசாத்திற்குக் கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.

இந்தச் சம்பவம் விஜய் சேதுபதியும் அரசியலில் களமிறங்குகிறாரா? என்ற கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியது.

இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் பாராட்டு விழாவை நடத்தி இருக்கின்றனர்.

இதற்கு விஜய் சேதுபதி நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர், "நம் விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களை வாழ்த்தி பதக்கமும், பரிசும் வழங்கியிருக்கின்றனர்.

இதில் கலந்துகொண்ட எல்லோருக்கும் வாழ்த்துகள். இந்த வேலையைச் சிறப்பாகச் செய்த என் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கு அன்பும், நன்றியும்" என்று தெரிவித்திருக்கிறார்.

டோரதி: "ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கும் ஆயுதமாய் நிற்கிறாள்" - படத்தைப் பாராட்டிய இயக்குநர்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜ... மேலும் பார்க்க

சிவாஜியின் 99வது பிறந்தநாளில் 'திருவிளையாடல்' டிரெய்லர்! பங்கேற்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பக்தி காவியங்களில் பெரும் வரவேற்பை அள்ளிய படம 'திருவிளையாடல்'. ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், டி.எஸ்.பாலையா என நடிப்பில் முத்திரை பதித்த கலைஞர்கள் நட... மேலும் பார்க்க

சூது கவ்வும் : சரவெடிக் குதூகலம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 28

`சினி'ஸ்கோப் 28சூது கவ்வும் : சரவெடிக் குதூகலம்!’எங்க பரம்பரையில எவனும் ஜாகுவார் காரைக் கழுவுனது கூட கிடையாது. அப்படிப்பட்ட பரம்பரையில வந்துட்டு அப்படி ஒரு காரை ஓட்டியிருக்கேன்னா, அதுக்காக ஒரு வேலை இல... மேலும் பார்க்க

நட்சத்திர ஹோட்டலாக மாறும் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம்! - விவரம் என்ன?

சென்னை கோடம்பாக்கத்தின் அடையாளங்களில் ஒன்று நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம். அவ்வப்போது தன் ரசிகர் சந்திப்பை நிகழ்த்த, ஓய்வு நேரத்தைக் கழிக்க, ரசிகர் மன்ற செயல்பாடுகளை ஒருங்கிணைக்க என ... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "இதுக்கு போய் சீரியஸாக ரிப்ளை பண்றீங்க.!" - வெங்கட் பிரபு பதிவும், SK பதிலும்!

சமீபத்திய பேட்டி ஒன்றில் கங்கை அமரன், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தொடர்பாகப் பேசிய விஷயம் இணையத்தில் வைரலானது. கங்கை அமரன், அந்த பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனைத்தான் குறிப்பிட்டுப் பேசுகிறார் என... மேலும் பார்க்க

Dorothy: "சிலர் படம் பார்க்காமல் தேவையில்லாத விவாதங்களைக் கிளப்பிவிடுறாங்க.!"- கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் கடந்த செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இ... மேலும் பார்க்க