செய்திகள் :

"பொது மயானத்தில் புதைத்தால் வேலை தர மாட்டோம்" ஈரோடு இளைஞரின் சாதி ஆணவ பேச்சு! என்ன நடந்தது?

post image

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ள பெரும்பாளி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமுதாய மக்களை அருகில் உள்ள பொது மயானத்தை பயன்படுத்த விடாமல் தீண்டாமை காரணமாக ஆதிக்க சாதியினர் தடுத்து வந்துள்ளனர். சாதிய கொடுமைக்கு பயந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள மயானத்தில் பட்டியல் சமுதாய மக்களின் இறுதி சடங்குகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், பெரும்பாளியைச் சேர்ந்த சென்னி என்ற 90 வயது நபர் வயது முதிர்வு காரணமாக கடந்த அக்டோபர் 5-ம்‌ உயிரிழந்திருக்கிறார். வழக்கமாக பட்டியல் சமுதாய மக்களை புகைக்கும் அந்த மயானத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தால் அருகில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்ய பட்டியல் சமுதாய மக்கள் முயற்சி செய்துள்ளனர்.

சாதிய தீண்டாமை

இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினரான பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிலர் தடுத்துள்ளனர். பெரும்பாளி பட்டியல் சமுதாய கிராமத்தினரின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்றுள்ளனர். அதையும் மதிக்காத ஆதிக்க சாதியினர், தடுத்து மிரட்டியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஆதிக்க சாதியைச் சேர்ந்த ரிதுவர்மன் என்ற இளைஞர், " இந்த பொது மயானத்தில் பட்டியல் சாதியினரின் உடலை அடக்கம் செய்தால், பட்டியல் சமுதாய மக்கள் யாரையும் எங்களின் தோட்டத்தில் வேலைக்கு சேர்க்க மாட்டோம். ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்" என சாதிய ஆணவத்துடன் மிரட்டியிருக்கிறார். இந்த பேச்சைக் கேட்டு பயந்த பட்டியல் சமுதாய தொழிலாளர்கள் இரண்டு பேர், ரிதுவர்மன் காலில் விழுந்துள்ளனர்.

ஆனால், அருகில் இருந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி அதிர்ச்சியையும் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது . இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த செயல்பாட்டாளர்களின் தலையீட்டால் சென்னியின் உடலை அந்த மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

சாதிய தீண்டாமை

பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவரை பொது மயானத்தில் அடக்கம் செய்ய விடாமல் தடுத்து மிரட்டியது மற்றும் பட்டியல் சமுதாயத்தினர், ஆதிக்க சாதியினர் காலில் விழுவதை தடுக்காமல் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் வேடிக்கை பாரத்த விவகாரம் தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.5 கோடி லஞ்சம் வாங்கினாரா இன்ஸ்பெக்டர்?”-தனியார் மருத்துவமனை விவகாரம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன். இவர் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரில் வசித்து வருகிறார். தனியார் மருத்துவமனை விவகாரத்தில் அதன் நிர்வாக இயக்குநரிடம் ரூ.5 கோடி லஞ்ச... மேலும் பார்க்க

பரமக்குடி: `பல பெண்களுடன் தொடர்பு; மனைவியைத் தாக்கி சித்ரவதை’ - DSP ஜாபர் சித்திக் சிறையிலடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி டி.எஸ்.பி-யாக இருந்த ஜாபர் சித்திக், முன்னதாக 2020-ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு மூலம் காவல் பணிக்கு நேரடியாகத் தேர்வானாவர். தஞ்சாவூர் மாவட்டம் திர... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு: விடுதி வார்டன் போக்சோவில் கைது; மாணவனின் பாலியல் புகாரில் திடீர் திருப்பம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் 110 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது மாணவனும் தங்கி, அங்குள்ள தனியார் பள்ளி... மேலும் பார்க்க

இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு; மகளுக்கு பிரியாணியில் விஷம் வைத்த அப்பா

மும்பை வடாலாவில் வசிப்பவர் ஷெரீப் கான். கார்பெண்டரான ஷெரீப் மனைவி கடந்த ஆண்டு புற்று நோய் காரணமாக இறந்து போனார். இதையடுத்து தனது மகள்கள் ரிஃபாத்(20), நுஜாத்(16) மற்றும் 10 வயது மகன் அகமது ஆகியோருடன் வ... மேலும் பார்க்க

தருமபுரி: மகளிர் சுய உதவிக் குழு பெயரில் ரூ 2.88 கோடி மோசடி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பெயர்களை முறைகேடாகப் பயன்படுத்தி 2.88 கோடி மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள... மேலும் பார்க்க

மாணவிகள், ஆசிரியைகளின் படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்து விற்பனை - பாலிடெக்னிக் மாணவர் மீது வழக்கு!

கேரள மாநிலம் புனலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து டெலிகிராம் குழுக்கள் மற்றும் ஆபாச வலைத்தளங்களுக்கு விற்... மேலும் பார்க்க