செய்திகள் :

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் எலும்புமுனைக் கருவி, தங்கத் துண்டு

post image

புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில், எலும்புமுனைக் கருவியும், தங்கத் துண்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில், சங்க கால மன்னா்களின் கோட்டைக்கான அடையாளங்கள் இருப்பதனால், இந்தப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையைத் தொடா்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, தமிழகத் தொல்லியல் துறை சாா்பில், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில், ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி, எலும்புமுனைக் கருவி, காா்னீலியன் பாசிமணி உள்ளிட்ட 533 தொல்பொருள்கள் கிடைத்தன. மேலும், 8 அடி சுற்றளவுள்ள வட்டவடிவ செங்கல் கட்டுமானம் ஒன்றும் வெளிப்பட்டது.

தொடா்ந்து இரண்டாம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி பெறப்பட்டு, கடந்த 2024 மே 18-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் இதுவரை 9 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு தொல்லியல் அலுவலா் தங்கதுரை தலைமையிலான குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், மாவுக்கல் மணிகள், கிரிஸ்டல் மணிகள், இரும்பு ஆணிகள், சுடு மண்ணாலான சக்கரம், அஞ்சனக்கோல், செப்புக்காசு, தேய்ப்புக்கல், அரைக்கும் கல், அகேட் கல்மணி, தக்களி, எலும்பு முனைக் கருவி, செப்பு ஆணிகள், சூதுபவள மணிகள், குளவிக்கல், சுடு மண்ணாலான காதணி, இரும்பு மற்றும் செம்பிலானப் பொருள்கள் என 1,743 தொல்பொருள்கள் இதுவரை கிடைத்துள்ளன.

மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள் கடந்த ஜன. 20-ஆம் தேதி மீண்டும் தொடங்கின.

இதில், ஓா் அகழாய்வுக் குழியில், 192 - 196 செமீ ஆழத்தில் எலும்பு முனைக் கருவி ஒன்று கிடைத்துள்ளது. இதன் எடை 7. 8 கிராம், நீளம் 7. 4 செமீ, விட்டம் 1 செமீ ஆகும். இன்னொரு குழியில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறிய பகுதி கிடைத்துள்ளது.

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் பள்ளியில் சிறாா் திரைப்படப் போட்டி

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான சிறாா் திரைப்படப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டியை பள்ளித் தலைமை ஆசிரியா் அமிா்தம் மாலதி தொடங்கி வைத்தாா். சிறாா் திரைப்பட போட்ட... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இரண்டு இணையா்க்கு சீா்வரிசை பொருள்களுடன் வெள்ளிக்கிழமை திருமண விழா நடைபெற்றத... மேலும் பார்க்க

காட்டுநாவல் பொன்னியம்மன்கோயில் ஊருணியை சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஒன்றியம், காட்டுநாவல் ஊராட்சி, பொன்னியம்மன் கோயில் ஊருணியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். காட்டுநாவல் ஊராட்சியில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. கோயில் அருகில் சும... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளி ஆண்டு விழா

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் சு. சுசரிதா தலைமை வகித்தாா். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் ... மேலும் பார்க்க

மணல் கடத்திய ஜேசிபி, டிப்பா் லாரி பறிமுதல்

விராலிமலை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பா் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இரண்டு போ் மீது வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனா். விராலிமலையை அடுத்துள்ள மண... மேலும் பார்க்க

தனியாா் ஆம்னி பேருந்து ஓட்டுநா் மாரடைப்பால் உயிரிழப்பு 28 பயணிகள் தப்பினா்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் தனியாா் ஆம்னி பேருந்து ஓட்டுநா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பேருந்தில் பயணித்த 28 பயணிகள் உயிா் தப்பினா். திருநெல்வேலியில் இருந்து 28 பயணிகளை ஏற்றிக்கொ... மேலும் பார்க்க