செய்திகள் :

போக்சோ: சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு - கடமைத் தவறிய 6 போலீஸாரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம்!

post image

வேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம், மோகனப்பிரியா என்பவரின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டு சந்தோஷ்குமார் என்பவரால் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடவும் சிறுமியை துன்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 23-6-2022 அன்று புகாரளித்தார். புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் பிரிவு 3(a), 4(2), 17 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506(i) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணைக்குப் பிறகு, பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களுக்கு ஆதரவாக போலீஸார் நடந்துக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

சிறுமி பாதிக்கப்பட்ட போக்சோ வழக்கை, அப்போதைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஷியாமளா, சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி, எழுத்தர் தமயந்தி ஆகியோர் கையாண்டனர். சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி, `மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டாம்’ என்று சிறுமியிடம் கூறினாராம்.

சிறுமி வன்கொடுமை

அதுமட்டுமல்லாமல், குழந்தை நல அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குப் பிறகுதான் அந்தச் சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​சிறுமியின் குடும்ப உறுப்பினரோ அல்லது குழந்தை நல அதிகாரியோ போலீஸாருடன் அழைத்துச் செல்லப்படவில்லை. மாறாக, அந்தப் பணிக்காக ஒரு காவலர் மட்டுமே நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 25-8-2023 அன்று மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வாசுகி என்பவரால் அவசர, அவசரமாக சிறுமி பாதிக்கப்பட்ட போக்சோ வழக்கு முடித்துவைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2025 டிசம்பர் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதில், ``வழக்கை கையாண்ட இன்ஸ்பெக்டர்கள் உட்பட முதல்நிலைக் காவலர்கள் வரையிலான 6 போலீஸாரும், தங்களின் கடமைகளை செய்யத் தவறியது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட சிறுமியிடமே மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டிருக்கின்றனர். அவர்கள் சிறுமிக்கு இழப்பீடு வழங்கக் கடமைப்பட்டவர்கள்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும். பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் ஷாகின், ஷியாமளா, வாசுகி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி ஆகியோரிடம் இருந்து தலா ரூ.2 லட்சமும், முதல்நிலை பெண் காவலர்களான தமயந்தி, ஜெயசுதா ஆகியோரிடம் இருந்து தலா ஐம்பதாயிரம் ரூபாயும் இழப்பீடாக வசூலித்து வழங்க வேண்டும்.

ஒரு மாதத்துக்குள் இழப்பீட்டை வசூலிக்க வேண்டும். மேலும், இவர்கள் 6 பேர் மீதும் `ஒழுங்கு நடவடிக்கை’ எடுக்கவும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.

சிறுமி பாதிக்கப்பட்ட `குற்ற எண் 20/2022’ வழக்கை, டி.எஸ்.பி பதவிக்குக் குறையாத ஒரு அதிகாரியைக் கொண்டு மறுவிசாரணை செய்து, 3 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவும் ஆணையம் பரிந்துரைக்கிறது’’ என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

மாநில மனித உரிமைகள் ஆணையம்

இதையடுத்து, இழப்பீட்டுத் தொகையை போலீஸாரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்தும் மாவட்ட எஸ்.பி-க்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, இழப்பீட்டுத் தொகையான ரூ.9 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மார்ச் மாதமே டி.ஜி.பி அலுவலகம் வழங்கியது.

அந்தத் தொகையை இன்ஸ்பெக்டர்கள் ஷாகின், வாசுகி, ஷியாமளா, சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி ஆகியோருடைய சம்பளத்தில் இருந்து தலா 5,500 ரூபாய் வீதம் 36 மாதங்கள் பிடித்தம் செய்யவும், முதல்நிலை பெண் காவலர்களான தமயந்தி, ஜெயசுதா ஆகியோரின் சம்பளத்தில் இருந்து தலா 1,400 ரூபாய் வீதம் 36 மாதங்கள் பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பான உத்தரவு டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து மேற்குறிப்பிட்ட போலீஸார் இப்போது பணியாற்றும் மாவட்ட எஸ்.பி-க்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்திருக்கிறது.

கரூர்: காவிரியில் மூழ்கி மூவர் பலியான சோகம்; திதி கொடுக்கச் சென்றபோது விபரீதம்; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், நரசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்த அருணன் (வயது:62), சுரேஷ் (வயது: 61) ஆகிய அண்ணன் - தம்பி மற்றும் அவர்களது உறவினரான ஸ்ரீனிவாசன் (வயது: 64) உள்ளிட்ட 7 பேர், அருணன் மற்றும் சுரேஷின் தாயாருக... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை நினைவு நாள்: சாலைகளில் எல்லை மீறிய இளைஞர்கள், திணறிய காவல்துறை!

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் கொங்கு நாட்டு பாளையக்காரர்களில் ஒருவருமான தீரன் சின்னமலை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளை எதிர்த்து காவிரி கரை போர், ஓடாநிலை போர், அரச்சலூர் போர் ஆகிய போர்களை நட... மேலும் பார்க்க

ஹரியானா: பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை சரமாரியாகக் குத்திக் கொலை; முகமூடி அணிந்தவரின் வெறிச்செயல்

ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகில் உள்ள சிக்ரோனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சந்தியா(29) என்ற ஆசிரியைப் பணியாற்றி வந்தார். பள்ளிக்குச் சற்று தொலைவில்தான் போலீஸ் நிலையம் இருக்கிறது. ஆசிரியை ச... மேலும் பார்க்க

"என் மகனை உயிருடன் வைத்திருக்க இதைச் செய்தேன்"- ஐஐடி-யில் தற்கொலை செய்த மகனுக்கு கோயில் கட்டிய தந்தை

கடந்த 2024ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் அக்ஷித் பூக்யா என்ற இரண்டாம் ஆண்டு மாணவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் ஒருக்கி... மேலும் பார்க்க

மும்பை சித்திவிநாயக் கோயில் உண்டியல் பணம் திருட்டு; ஆண்டுக்கு ரூ.18 கோடியை அபேஸ் செய்த 8 ஊழியர்கள்

அயோத்தி ராமர் கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அது போன்று உண்டியல் பணம் திருடப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. மும்பையில் மிகவும் பிரபலமானது சித... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மைனர் பெண்; முகத்தைச் சிதைத்துவிட்டு வீசிய கும்பல்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஹைலாகண்டி மாவட்டத்தில் 15 வயதேயான மைனர் பெண்ணை மர்ம நபர்கள் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரது முகம் மற்றும்... மேலும் பார்க்க