செய்திகள் :

போர் எதிரொலி: `சிறப்பு கூட்டத்தைக் கூட்டி பிரதமர் ஆலோசனை' - அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!

post image

மத்திய ஆசியாவில் நடந்துவரும் போரால், பல்வேறு நாடுகளில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் போர் விளைவால் எரிசக்தி தட்டுப்பாடில் தொடங்கி விலைவாசி உயர்வு வரை பொதுமக்களும் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி, நேற்று (ஏப்ரல் 1), பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) சிறப்புக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், தொடர்ந்து நடைபெற்று வரும் மேற்கு ஆசிய மோதலின் பின்னணியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் முன்னெடுப்புகள் குறித்த விவாதமும், பெட்ரோலியப் பொருட்கள், குறிப்பாக LNG மற்றும் LPG ஆகியவற்றின் விநியோகத்தையும், போதுமான மின்சார இருப்பையும் உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இது தொடர்பாக அமைச்சரவைச் செயலாளர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ``பெட்ரோலியப் பொருட்கள், குறிப்பாக LNG மற்றும் LPG ஆகியவற்றின் விநியோகத்தையும், போதுமான மின்சார இருப்பையும் உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைச் செயலாளர் விளக்கமளித்தார்.

பல்வேறு நாடுகளிலிருந்து வரும் புதிய வரத்துகள் மூலம், LPG-யைப் பெறுவதற்கான மூலங்கள் பல்வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. LNG பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்டு வருவதாகவும், உள்நாட்டு நுகர்வோருக்கான LPG விலைகள் நெருக்கடிக்கு முந்தைய நிலையிலேயே மாற்றமின்றித் தொடர்வதாகவும் அமைச்சரவைச் செயலாளர் மோடியிடம் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு முன்னெடுப்புகள் குறித்தும் கேட்டரிந்த பிரதமர் மோடி, மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பையும் ஆய்வு செய்தார். நாட்டில் உரங்களின் இருப்பு குறித்தும், பருவ மழை, குளிர் பருவங்களில் அவற்றின் இருப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நடந்துவரும் மோதலின் தாக்கத்திலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்குச் சரியான தகவல்கள் தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்யுமாறும் பிரதமர் வலியுறுத்தினார். தற்போது நிலவும் உலகளாவிய சூழலால் பாதிக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் பல்வேறு துறைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் மோடி உத்தரவிட்டார்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`சாதி, மதமற்றவர்' சான்றிதழ்; நடைமுறை எதார்த்தமும் சட்டச் சிக்கல்களும் - ஓர் ஆழமான அலசல்!

நடிகர் பார்த்திபன் ஹைதராபாத் நிகழ்ச்சியில் தனது சாதி குறித்துப் பேசியது விமர்சனத்திற்குள்ளான நிலையில், தான் ஒரு 'சாதி, மதமற்றவர்' என அறிவிக்கக் கோரி வேளச்சேரி வட்டாட்சியரிடம் மனு அளித்தார். பின்னர் இத... மேலும் பார்க்க

'Full' பாதுகாப்பு: இனி யாரும் ஆன்லைன் மோசடியில் ஏமாறமாட்டார்கள்?' - RBI-ன் புதிய முயற்சி

தொழில்நுட்பம் அப்டேட் ஆக... ஆக, இன்னொரு பக்கம், ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும், வகைகளும் நீண்டுகொண்டே போகின்றன. இந்த மோசடிகளுக்குப் பெரியவர்கள், சிறியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எந்த வித... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாகன பேரணி; மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு | Photo Album

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குகளை உறுதி செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரவணன் பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரசாரங்க... மேலும் பார்க்க

20 பேர் பலியான சத்தீஸ்கர் ஆலை விபத்து: வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் மீது வழக்குப் பதிவு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா மின் நிலையத்தின் கொதிகலனில் (boiler) ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, வேதாந்தா ரிசோர்சஸ்... மேலும் பார்க்க

VIP பணிகளுக்காக முடக்கப்பட்ட ஆம்புலன்ஸ்?: 'பறிபோன ஊடகவியலாளர் உயிர்' - பகீர் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேசத்தில் 'ஸ்வர்ண் மங்கலம்' (Swarn Mangalam) என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் தீபக் சோனி. இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரைசெனில் நடைபெற்ற ஒரு விவசாயக் கண்காட்சியில் கலந்துகொள்... மேலும் பார்க்க

சரிவிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு மீண்டது எப்படி? போர் நிறுத்தம் மட்டும் காரணமல்ல

சில மாதங்களாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு இருந்தது.கடந்த 30-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு இன்ட்ரா டேயில் ரூ.95-ஐ கூட தொட்டது. இது வரலாற்றின் புதிய வீழ்ச்சி. இந்த நிலைமையெல்லாம் இப்போது... மேலும் பார்க்க