செய்திகள் :

16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு: ரூ.11,718.24 கோடி நிதி ஒதுக்கீடு; ‘டிஜிட்டல்’ முறையில் தொடக்கம்!

post image

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெறும் 8-வது கணக்கெடுப்பு இன்று (ஏப்ரல் 1, 2026) தொடங்குகிறது. உலகிலேயே மிகப்பெரிய இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, வரலாற்றிலேயே முதல் முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படவுள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டம் (ஏப்ரல் - செப்டம்பர் 2026) வரை நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பின்போது, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு நடைபெறும். இதில் வீடுகளின் நிலை, குடும்ப வசதிகள் மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு

முதல் முறையாக, மக்கள் தங்களின் விவரங்களை இணையதளம் வாயிலாக தாங்களாகவே பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு வசதி வழங்கப்படுகிறது. வீடு வீடாக கணக்கெடுப்பாளர்கள் வருவதற்கு 15 நாட்களுக்கு முன்பே இந்த வசதி தொடங்கும்.

இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரியில் தொடங்கும். இதில் தனிநபர்களின் மக்கள்தொகை, கல்வி, இடம்பெயர்வு மற்றும் சமூக-பொருளாதார விவரங்கள் சேகரிக்கப்படும். அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு தீர்மானத்தின்படி, இரண்டாம் கட்டத்தில் சாதி வாரியான தகவல்களும் சேகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16 முதல் மே 15 வரை கர்நாடகா, ஒடிசா, அந்தமான் நிக்கோபார், டெல்லி, கோவா, லட்சத்தீவு, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும், மே 1 முதல் மே 30 வரை ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் நடைபெறும்.

இந்த கணக்கெடுப்பிற்காக மத்திய அரசு ரூ.11,718.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கணக்கெடுப்பாளர்கள் காகிதங்களுக்குப் பதிலாக ஸ்மார்ட்போன்களில் உள்ள பிரத்யேக மொபைல் செயலி மூலம் தரவுகளைச் சேகரிப்பார்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்தச் செயலி மற்றும் சுய-கணக்கெடுப்பு இணையதளம் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கும், கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து முடிக்கவும் இந்த டிஜிட்டல் முறை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`ஏன் நம்ம ஸ்கூல் மட்டும் இப்படியிருக்குன்னு' அரசு பள்ளியில் பயனில்லா கழிவறை; மனம் வெம்பும் மாணவர்கள்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 1949-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியானது, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்கப்பட்ட முதல்... மேலும் பார்க்க

'இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு' - 3 காரணங்கள் என்ன? இன்னும் எவ்வளவு வரை சரியும்?

நேற்று அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.95-ஐ தாண்டியது. இந்திய ரூபாயின் மதிப்பு இந்தளவுக்கு வீழ்ச்சியடைவது இதுவே முதன்முறை. இந்திய ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடு... மேலும் பார்க்க

PAN, ஆதார் கார்டு தகவல்கள் ஒன்றுபோல இல்லையா? - நாளை முதல் அமலுக்கு வரும் பான் கார்டு மாற்றங்கள்!

நாளை ஏப்ரல் 1-ம் தேதி. நாளை முதல் புதிய நிதி நடைமுறைகள் பல அமலுக்கு வர உள்ளன. அப்படி பான் கார்டில் என்னென்ன மாற்றங்கள் வர உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம். பான் கார்டிற்கு புதிதாக விண்ணப்பிக்கும் போது…ந... மேலும் பார்க்க

'VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காத திருமா... பின்னணி என்ன?'

'விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸுக்கு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சித் தலைவர் திருமாவளவன் வாய்ப்பு வழங்காதது ஏன்?' என்ற கேள்வி சமூக வலைதளங்களில் ... மேலும் பார்க்க

`தூக்கு தண்டணையா... ஆயுள் தண்டணையா என முடிவு செய்ய வேண்டும்'- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்

சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு, நீதிபதி முத்துகுமரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த 23 ஆம் தேதி 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தெரிவித்ததோடு, அவர்களின் மனநிலை குறித்து அறிக்கை தா... மேலும் பார்க்க

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 'Live-in உறவிலிருப்பவர்கள் தம்பதியா?' - மத்திய அரசின் பதில் என்ன?

மத்திய அரசு அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இக்கணக்கெடுப்பில் லிவ் இன் முறையில் வாழ்பவர்களை எவ்வாறு கணக்கெடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு மத்திய அரசு விளக்கம் ... மேலும் பார்க்க