செய்திகள் :

PBKS vs GT:``இது நமக்கான நாள் இல்லை. ஆனாலும்.!" - தோல்வி குறித்து கேப்டன் சுப்மன் கில்

post image

ஐபில் தொடரின் நேற்றைய (மார்ச் 31) போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 163 என்ற இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை 19.1 ஓவர்களில் துரத்தி, போட்டியை பஞ்சாப் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது.

பஞ்சாப் அணியுடனான தோல்விக்கு பின்னர் பேசிய குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில், ``நாங்கள் நன்றாகவே பந்துவீசினோம் என்று நினைக்கிறேன். ஆனால், கடைசி ஐந்து அல்லது ஆறு ஓவர்களில் எங்களுடைய பேட்டிங் வேகமெடுக்கவில்லை என்றுதான் கூறுவேன். இந்த பிட்ச் 210-220 ரன்கள் எடுக்கக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை. நாங்கள் ஒரு 175 அல்லது 180 ரன்கள் எடுத்திருந்தால் ஒரு நல்ல இலக்காக இருந்திருக்கும்.

Cooper Connolly
Cooper Connolly

இரண்டாவது இன்னிங்ஸின் போது தொடர்ந்து மழை பெய்ததால் பந்து நனைந்தது, இது பேட்டிங் செய்வதற்குச் சாதகமாக அமைந்தது. ஆனாலும் நாங்கள் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டோம் என்று நினைக்கிறேன். நாங்கள் எதிரணிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோம். பிரசித் கிருஷ்ணாவை பந்து வீச முன்னரே அழைத்திருக்கலாம், ஆனால் அவர் சரியான நேரத்தில் வந்து விக்கெட்டுகளை எடுத்தார். 17 மற்றும் 18-வது ஓவர் வரை எங்களை ஆட்டத்தில் நீடிக்கச் செய்தார்.

அதே போல் அசோக் சர்மாவைப் பொறுத்தவரை, அவர் கடினமாக உழைக்கிறார். அவர் எங்களுக்குக் கிடைத்த ஒரு நல்ல வீரர். அவர் தொடக்கத்திலும் நன்றாகப் பந்துவீசினார், இறுதியிலும் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் தொடர்ந்து விளையாடி அனுபவம் பெறும்போது எங்களுக்கு ஒரு சிறந்த சொத்தாக இருப்பார். அவர் கடின உழைப்பாளி, நல்ல ஃபீல்டரும் கூட. நான் எனது அணியினரிடம் கூற நினைப்பது, இது நமக்கான நாள் இல்லை. ஆனாலும் நாம் ஓரளவுக்கு நன்றாகவே விளையாடினோம். தொடர்ந்து முன்னேற வேண்டும். தீவிரத்தைக் கூட்ட வேண்டும் மற்றும் உங்களுடைய சிறந்த பங்களிப்பைத் தொடர்ந்து வழங்க வேண்டும்." என்று பேசியிருக்கிறார்.

சரணடைந்த குஜராத் டைட்டன்ஸ்; முதல் போட்டியை கெத்தாய் வென்ற பஞ்சாப்! - என்ன நடந்தது?

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது பஞ்சாப் அணி. Punjabஐபில் தொடரில் நேற்று (மார்ச்31) பஞ்சாப் vs குஜராத் அணிகளுக்கு இடையேய... மேலும் பார்க்க

'Thala For A Reason' இல்ல 'சின்ன பையன்லாம் தல மேலயே அடிக்கிறான் சார்!'' - CSK பரிதாபங்கள்!

முதல் போட்டியில் பெங்களூரு வென்றுவிட்டது. இரண்டாவது போட்டியில் மும்பை வென்றுவிட்டது. 'இப்போ நாம ஜெயிக்கலன்னா மானக்கேடா ஆச்சேயா...' என்கிற பதைபதைப்புடன் தான் நேற்றைய போட்டியை சி.எஸ்.கே ரசிகர்கள் பார்த்... மேலும் பார்க்க

'சீசனை தோல்வியோடு தொடங்கிய சி.எஸ்.கே!' - எப்படி வென்றது ராஜஸ்தான்?

ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.RR vs CSKம... மேலும் பார்க்க

'ஆடினே இருப்பேன்!' - காவ்யா மாறனின் ராஜ தந்திரங்களை உடைத்தெறிந்த ஆர்.சி.பி! - எப்படி வென்றது?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், 'எம்.எல்.ஏக்களுக்கு இலவச டிக்கெட்' கொடுக்கவில்லை என்பதை சில எம்.எல்.ஏக்கள் அரசியலாக மாற்றி அறச்சீற்றம் கொண்டிருந்தனர். கர்நாடகா கிரிக்கெட் போர்ட் அப்படி மூக்கு சிந்தி ... மேலும் பார்க்க

வாடகை பாக்கியால் மைதானத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு; இந்திய கால்பந்துக்கு மீண்டும் ஒரு அவமானம்!

இந்தியா - ஹாங்காங் இடையேயான கால்பந்து போட்டி மார்ச் 31-ம் தேதி கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. 2016-க்குப் பிறகு இந்திய அணி கொச்சியில் விளையாடும் முதல் சர்வதேசப் போட்ட... மேலும் பார்க்க

`திருமணத்துக்கு யாரும் பெண் தரல; உறங்க மது குடிக்கிறேன்!' - கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் வேதனை

முன்னாள் கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளரான லட்சுமண் சிவராமகிருஷ்ணன் தனது 17 வயதிலேயே கிரிக்கெட் உலகில் அறிமுகமானார். மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான சிவராமகிருஷ்ணன் இனவெறிப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க