செய்திகள் :

Youth: "படம் பார்த்திட்டு சிம்பு எனக்கு கால் பண்ணாரு.!"- நெகிழும் சுராஜ் வெஞ்சராமூடு

post image

கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான 'யூத்' படத்தின் சக்சஸ் மீட் நேற்று (மார்ச்.31) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு, " 'யூத்' படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தான் கொடுத்தது. அதற்கு இயக்குநர் கென்னுக்கு நன்றி.

யூத்
யூத்

அவர் இயக்குநர் மட்டும் அல்ல. பிறவி நடிகரும் கூட. கதை சொல்லும் போது அவரிடம் ஒரு ஃபயர் இருந்தது. அந்த ஃபயர் தான் உங்களுடைய வெற்றி. இது மட்டுமல்ல இதை விட இன்னும் உயரத்துக்கு நீங்கள் செல்வீர்கள்.

இப்போது நான் உங்களுடைய ரசிகன் ஆகிவிட்டேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இதைவிட பெரிய புரொட்யூசர் ஆகிவிடுவார், வாழ்த்துகள் கருப்பையா. என்னுடன் பணியாற்றிய நளினி மேடம், தேவதர்ஷினி மேடம் எல்லோருக்கும் நன்றி.

படப்பிடிப்பில் எனக்கு ஏதாவது டயலாக் இருக்கும் நாளில் கென் உன்னிடம் சரியாக பேசி இருக்க மாட்டேன். அதற்கு காரணம் எனக்கு வசனம் மறக்க கூடாது என்பதுதான்.

மலையாளத்தில் படம் நடிக்கும் போது வசனத்தை வேகமாக கொடுங்கள் என்பேன். இங்கு வசனம் கொடுக்கும் போது `என்னடா நாளைக்கே படம் ரிலீஸ் பண்ண போறியா, கொஞ்சம் டைம் கொடுடா' என்பேன்.

சுராஜ் வெஞ்சராமூடு
சுராஜ் வெஞ்சராமூடு

அந்த டென்ஷனில் தான் நான் பேசி இருக்க மாட்டேன். இந்தப் படத்தை பார்த்துவிட்டு ஒரு பெரிய ஹீரோ போன் செய்தார். அது வேறு யாரும் இல்லை சிலம்பரசன் சார் தான்.

இந்தப் படத்தை மிகவும் பாராட்டி பேசினார். சிலம்பரசன் சாருக்கும், இந்தப் படத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Youth: "நான் இந்தக் கதையை சொல்லும்போது, அவரிடம் 50 ரூபாய்கூட இல்லை; ஆனால்.!" - கென் கருணாஸ்

கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் 'யூத்' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 'சிறை' அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சின்ன தமிழா எனப் பலரும் நடித்திருக்கும் இத்திரைப்படம் திரையரங்கு... மேலும் பார்க்க

"சென்னை போய் ஏமாறப்போறன்னு அப்பா சொன்னாரு; நானும் கென் ரூம்குள்ள நுழைஞ்சதும்..!' - சின்னா தமிழா

கென் கருணாஸ் இயக்கி, நடித்த 'யூத்' திரைப்படத்திற்கான சக்சஸ் மீட் சென்னையில் நடந்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடித்த சின்ன தமிழா யூத் திரைப்படம் குறித்து பேசியதாவது..."படத்துல நடிக்கணும்ங்கறது சின்ன ... மேலும் பார்க்க

Youth: "என் வாழ்க்கைய இந்தப் படம் மாத்தும்னு நினைக்கல.!" - கென் கருணாஸ் எமோஷனல்

கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான 'யூத்' படத்தின் சக்சஸ் மீட் இன்று (மார்ச். 31) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய கென், " நான் ஒரு படம் பண்ணி, தியேட்டர் விசிட்டுக்கு போகும் போதெல்லாம் என்னை... மேலும் பார்க்க

Leader: "அந்தச் சூழலில்தான் லெஜெண்ட் சாருடனான பட வாய்ப்பு வந்தது!" - துரை செந்தில்குமார்

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் 'லீடர்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ஷ்யாம், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில... மேலும் பார்க்க

Kaattaan: ''ரஜினி சார் 'நான் போர் அடிக்கிறேனா'னு கேட்டாரு!" - வடிவேல் முருகன் ஷேரிங்ஸ்

திரைப்பட விமர்சனங்கள் மூலம் நமக்கு பரிச்சயமானவர் வடிவேல் முருகன். இன்று தமிழ் சினிமாவில் நடிகராக ரவுண்டு வரத் தொடங்கிவிட்டார். 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்திர... மேலும் பார்க்க

Leader: "லெஜண்ட் சரவணன் போல தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் சினிமாவுக்கு தேவை" - நடிகர் ஷ்யாம்

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் 'லீடர்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ஷ்யாம், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில்... மேலும் பார்க்க