செய்திகள் :

Leader: "அந்தச் சூழலில்தான் லெஜெண்ட் சாருடனான பட வாய்ப்பு வந்தது!" - துரை செந்தில்குமார்

post image

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் 'லீடர்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

ஷ்யாம், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

'Leader' Movie Team
'Leader' Movie Team

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இயக்குநர் துரை செந்தில்குமார் பேசுகையில், "'லீடர்' என்னுடைய ஆறாவது படம். இந்தத் திரைப்படம் ஆரம்பித்தவுடன் நாங்கள் நினைத்த பெயர் ஜிப்ரான்தான்.

அவருடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. சில நேரங்களில் நான் அவரை தொடர்பு கொள்ள நினைக்கும் தருணத்திலேயே அவர் என்னை தொடர்பு கொள்வார். எங்களுக்குள் ஒரு ஆன்மிக இணைப்புபோல இருந்தது.

லீடர் திரைப்படம்
லீடர் திரைப்படம்

ஒரு ஆக்ஷன் காட்சிக்கு சக்திவாய்ந்த முருகன் பாடல் தேவை என்று நினைத்தேன். நான் ஒரு குறிப்பைக் காட்டியபோது, அது ஏற்கெனவே ஜிப்ரான் சார் உருவாக்கிய ஆன்மிக இசை என்று தெரியவந்தது. இந்தப் படத்தின் உயர்வுக்கு அவருடைய இசை மிகப் பெரிய காரணம்.

ஸ்டன்ட் மாஸ்டர் மகேஷ் மாத்யூவிற்கும் என் நன்றி. இயக்குநரின் பார்வையை முழுமையாகப் புரிந்து கொண்டு அதை திரையில் கொண்டு வரும் கலைஞர்கள் மிகவும் அரிது. அந்த வகையில் நீங்கள் இருவரும் எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தீர்கள். பிரவீன் என் எண்ணங்களை திரையில் அழகாக வெளிப்படுத்தினார்.

ஷாம் சார் இப்படத்திற்குள் வந்தது அந்தக் கதாபாத்திரத்தை மெருகேற்றியது. ஆண்ட்ரியா மேடம், விவேகா சார், மோகன் ராஜன் என அனைவருக்கும் என் நன்றி.

குறிப்பாக விவேகா சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற என் ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியது. குழந்தை நட்சத்திரம் இயல்பாகவே திறமை கொண்டவர்.

அவரின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களைச் சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில்தான் லெஜெண்ட் சாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

லீடர் படக்குழு
லீடர் படக்குழு

அதே நேரத்தில் 'கருடன்' வாய்ப்பும் வந்தது. நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, 'நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம்' என்றார்.

அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம். அவருடைய எனர்ஜி, அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டுபோல இருக்கும். எந்த நேரத்திலும் அதே உற்சாகம் அவரிடம் நிறைந்திருக்கும்.

நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார். 'நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள். நாம் தாமதிக்கக் கூடாது' என்று அவர் சொல்வார்.

அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண்களை மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு." என்றார்.

Youth: "என் வாழ்க்கைய இந்தப் படம் மாத்தும்னு நினைக்கல.!" - கென் கருணாஸ் எமோஷனல்

கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான 'யூத்' படத்தின் சக்சஸ் மீட் இன்று (மார்ச். 31) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய கென், " நான் ஒரு படம் பண்ணி, தியேட்டர் விசிட்டுக்கு போகும் போதெல்லாம் என்னை... மேலும் பார்க்க

Kaattaan: ''ரஜினி சார் 'நான் போர் அடிக்கிறேனா'னு கேட்டாரு!" - வடிவேல் முருகன் ஷேரிங்ஸ்

திரைப்பட விமர்சனங்கள் மூலம் நமக்கு பரிச்சயமானவர் வடிவேல் முருகன். இன்று தமிழ் சினிமாவில் நடிகராக ரவுண்டு வரத் தொடங்கிவிட்டார். 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்திர... மேலும் பார்க்க

Leader: "லெஜண்ட் சரவணன் போல தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் சினிமாவுக்கு தேவை" - நடிகர் ஷ்யாம்

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் 'லீடர்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ஷ்யாம், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில்... மேலும் பார்க்க

Leader: "சரவணன் 50 வயதைத் தாண்டி நடிக்க வந்திருப்பதாகச் சொன்னார்கள்; ஆனால்..." - பாக்யராஜ்

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் 'லீடர்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ஷ்யாம், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில... மேலும் பார்க்க

நடிகை ஜனனிக்கு டும் டும்டும்! - காதலரான விமானியை மணந்தார்!

பாலாவின் 'அவன் இவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து 'தெகிடி', 'பலூன்', 'ஹாட் ஸ்பாட்' jananiஎன ... மேலும் பார்க்க