செய்திகள் :

"சென்னை போய் ஏமாறப்போறன்னு அப்பா சொன்னாரு; நானும் கென் ரூம்குள்ள நுழைஞ்சதும்..!' - சின்னா தமிழா

post image

கென் கருணாஸ் இயக்கி, நடித்த 'யூத்' திரைப்படத்திற்கான சக்சஸ் மீட் சென்னையில் நடந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடித்த சின்ன தமிழா யூத் திரைப்படம் குறித்து பேசியதாவது...

"படத்துல நடிக்கணும்ங்கறது சின்ன வயசுல இருந்து எனக்குக் கனவு. ஆனா, நிறைய பேர் என்னை நம்பல.

'இங்க இருக்க நிறைய பேருக்கே சினிமால வாய்ப்பு இல்லை. லண்டன்ல பிறந்த உனக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்'னு நிறைய கேள்விகள் இருந்துச்சு.

 'யூத்' படம்
'யூத்' படம்

அப்பதான் நான் 'சின்னா தமிழா'ன்னு ஒரு இன்ஸ்டாகிராம் பேஜை சான்ஸ் கிடைக்கிற வரை டிக்டாக், சோசியல் மீடியா மூலமா ஏதாவது பண்ணி நம்ம திறமையை ப்ரூஃப் பண்ணுவோம்'னு ஆரம்பிச்சேன்.

அந்த நேரத்துலதான் கென் எனக்கு இன்ஸ்டாகிராம்ல மெசேஜ் பண்ணார். 'ப்ரோ, நீங்க சென்னைக்கு வரும்போது நம்ம மீட் பண்ணலாம். என்கிட்ட ஒரு கதை இருக்கு, அதுல ஒரு கேரக்டர் இருக்கு. இன்ஸ்டால என்ன பண்றீங்களோ அதையே இங்க பண்ணுங்க'ன்னு சொல்லி எனக்கு ஒரு வாய்ப்பு தந்தார்

கென்னுக்கும் சினிமா புதுசு... எனக்கும் புதுசு. ஆனா ஒவ்வொரு மாசமும் எனக்கு போன் பண்ணி அப்டேட் சொல்லுவான். 'இந்த ஆபீஸ்க்குப் போனேன், அவங்க இப்படிச் சொன்னாங்க'ன்னு சொல்லுவான். அவனையே ரிஜெக்ட் பண்ணும்போது நம்மளை எப்படி ஏத்துப்பாங்கன்னு நான் அப்போ யோசிச்சிருக்கேன்

கடைசியா ஒருநாள் போன் பண்ணி, 'ஆகஸ்ட் 25-ஆம் தேதி நீ சென்னைக்கு வரப்போற, நடிக்கப்போற'ன்னு சொன்னான். நான் சென்னைக்கு வந்து ஒரு ரூம்க்குள்ள நுழைஞ்சப்போ, அங்க ஒரு 10 பேர் படுத்துருந்தாங்க.

சின்னா தமிழா
சின்னா தமிழா

எங்க அப்பா அப்பவே சொன்னாரு, 'நீ அங்க போய் ஏமாறப்போற'ன்னு. ஆனா எனக்கு அந்த டீம் மேல நம்பிக்கை இருந்தது.

அந்த ஏழு மாசம் கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன், ஆனா அங்க இருந்தது முழுசும் 'கென் அண்ட் கேங்' தான். அவங்கதான் இன்னைக்கு இந்தப் படத்தை உருவாக்கி இருக்காங்க.

சக்சஸ் ஆகுறதுக்கு பேக் கிரவுண்ட் தேவையில்லை. பேஷன் இருந்தா கண்டிப்பா ஜெயிக்கலாம். என்னை இந்த கேங்ல சேர்த்துக்கிட்ட கென்னுக்கு ரொம்ப நன்றி".

Youth: "என் வாழ்க்கைய இந்தப் படம் மாத்தும்னு நினைக்கல.!" - கென் கருணாஸ் எமோஷனல்

கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான 'யூத்' படத்தின் சக்சஸ் மீட் இன்று (மார்ச். 31) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய கென், " நான் ஒரு படம் பண்ணி, தியேட்டர் விசிட்டுக்கு போகும் போதெல்லாம் என்னை... மேலும் பார்க்க

Leader: "அந்தச் சூழலில்தான் லெஜெண்ட் சாருடனான பட வாய்ப்பு வந்தது!" - துரை செந்தில்குமார்

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் 'லீடர்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ஷ்யாம், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில... மேலும் பார்க்க

Kaattaan: ''ரஜினி சார் 'நான் போர் அடிக்கிறேனா'னு கேட்டாரு!" - வடிவேல் முருகன் ஷேரிங்ஸ்

திரைப்பட விமர்சனங்கள் மூலம் நமக்கு பரிச்சயமானவர் வடிவேல் முருகன். இன்று தமிழ் சினிமாவில் நடிகராக ரவுண்டு வரத் தொடங்கிவிட்டார். 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்திர... மேலும் பார்க்க

Leader: "லெஜண்ட் சரவணன் போல தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் சினிமாவுக்கு தேவை" - நடிகர் ஷ்யாம்

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் 'லீடர்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ஷ்யாம், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில்... மேலும் பார்க்க

Leader: "சரவணன் 50 வயதைத் தாண்டி நடிக்க வந்திருப்பதாகச் சொன்னார்கள்; ஆனால்..." - பாக்யராஜ்

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் 'லீடர்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ஷ்யாம், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில... மேலும் பார்க்க