செய்திகள் :

``இனி உங்களுக்கு உதவப்போவதில்லை..." - உலக நாடுகள் மீது விரக்தியில் ட்ரம்ப்!

post image

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தொடங்கியப் போர் உலகளவில் பெரும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஹோர்முஸ் ஜலசந்தியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முடிவில் தொடர்ந்து இரு தரப்பும் கடுமையாக மோதி வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்க போர் கப்பல், தரைப்படை வீரர்கள் என மேற்கு ஆசியாவில் குவிந்தனர். அதே நேரம், `எதுவானாலும் எதிர்க்கொள்ளத் தயாராக இருக்கிறோம்' என உறுதியோடு அமெரிக்காவை எச்சரித்து வந்தது ஈரான்.

இதற்கிடையில் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானில் தங்கள் நடவடிக்கைகளை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்
ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்

அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதே வேளையில், தனது வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளையும் தொடர்வதால், இரண்டு முதல் மூன்று வார காலக்கெடுவுக்குள் இந்தப் போர் முடிவுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ட்ரம்ப், ``ஈரான் மீதான தற்போதைய நடவடிக்கைகளை இன்னும் சில வாரங்களிலோ அல்லது ஒரு சில நாட்களிலோ முடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளோம். அப்படி வெளியேறும்போது ஈரானின் கட்டமைப்பு முழுமையாக வீழ்ந்திருக்கும். ஈரானுடன் எந்தவொரு சமரச ஒப்பந்தமும் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டப்படவில்லை. மாறாக, ஈரானால் இனி அணு ஆயுதங்களை உருவாக்கவே முடியாது என்ற நிலையை உறுதி செய்து, அந்த நாட்டைப் பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் கற்காலத்திற்கு தள்ளுவதே இலக்காகக் வைத்திருக்கிறோம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

மேலும், உலக நாடுகளின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ஏற்படுத்தும் தடைகளைப் பற்றி இனி கவலைப்படப் போவதில்லை. சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்களுக்குத் தேவையான எண்ணெய் அல்லது எரிவாயுவைப் பெற விரும்பினால், அவர்களே அந்தப் பகுதிக்குத் தங்கள் கப்பல்களை அனுப்பி, தங்களுக்குத் தேவையான பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்து கொள்ள வேண்டும். மற்ற நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை இனி ஏற்கப்போவதில்லை. அந்தப் பகுதியில் என்ன நடந்தாலும் அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை முன்னதாக ட்ரூத் சோஷியல் பதிவில், ``அமெரிக்கா இனி உங்களுக்கு உதவ அங்கே இருக்காது. எங்களுக்குத் தேவைப்பட்டபோது நீங்கள் எங்கே போனீர்கள்? நீங்கள் எங்களுக்காக அங்கே இருக்கவில்லை, இப்போது நாங்களும் உங்களுக்காக இருக்கப் போவதில்லை. ஈரான் இப்போது முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுவிட்டது. கடினமான வேலைகளை நான் முடித்துவிட்டேன். இனி உங்கள் எண்ணெயை நீங்களே போய் எடுத்துக்கொள்ளுங்கள்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹோர்மூஸ் நீரிணை: அமெரிக்கா - ஈரான் போர்
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்கா - ஈரான் போர்

இதற்கிடையில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், ``அந்த நீரிணை திறந்திருப்பதை உறுதி செய்வதற்காக, அதற்கான ஏற்பாடுகளில் பெரும்பகுதியை நாங்களே செய்திருந்தாலும், இனிவரும் காலங்களில் இது வெறும் எங்கள் பிரச்சனை மட்டுமே அல்ல. ஈரானுடனான போரின் அடுத்த சில நாட்கள் தீர்க்கமானதாக இருக்கும். அது ஈரானுக்கும் தெரியும். அதைத் தடுக்க இராணுவ ரீதியாக அவர்களால் செய்யக்கூடியது என கிட்டத்தட்ட எதுவுமே இல்லை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தலில் தோல்வியே காணாத கலைஞர்; 1984 தேர்தலில் மட்டும் போட்டியிடாதது ஏன்? | Vote Vibes

தமிழக அரசியல் வரலாற்றில் தோல்வியே காணாத தலைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி. 1957-ம் ஆண்டு போட்டியிட்ட குளித்தலையில் தொடங்கி, 2016-ம் ஆண்டு போட்டியிட்ட த... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க இனி கூடுதல் செலவு: 5% - 10% வரை சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளும் சுகமான பயணம், இன்று முதல் வாகன ஓட்டிகளுக்குச் சற்று கசப்பான அனுபவமாக மாறவுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ள புதிய சுங்கக் கட்டண உயர்வு, ஏப்ரல... மேலும் பார்க்க

TVK: விஜய் முன் நிறுத்தப்பட்ட `திடீர்' வேட்பாளர் - திக்குமுக்காடும் திருப்பத்தூர் தவெக!

திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க-வில், திருப்பத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருந்தவர் டாக்டர் என்.திருப்பதி. 2026 சட்டமன்றத் தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியில் சீட் எதிர்பார்த்து, அ.தி.மு.க மாவட்டச்... மேலும் பார்க்க

”எடப்பாடி பழனிசாமி பாஜக-வின் கிளைச் செயலாளராக மாறிவிட்டார்”- ஸ்டாலின் காட்டம்!

தி.மு.க தலைமையிலான மதச்சார்ப்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் முழ... மேலும் பார்க்க

தேர்தல் விதிமீறல்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளரான அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று முன்தினம் (மார்ச் 30) சென்னையிலிருந்து ரயில் மூலமாக காட்பாடிக்கு வந்தபோது, அவரின் மகனும் வேலூர் எம்.ப... மேலும் பார்க்க

"ஊழலின் பேரரசு திமுக ஆட்சி; மத்திய அரசு கொடுத்த ஒரு‌ பைசாக் கூட.!" - பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. இதையொட்டி இன்று கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப... மேலும் பார்க்க