செய்திகள் :

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க இனி கூடுதல் செலவு: 5% - 10% வரை சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

post image

தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளும் சுகமான பயணம், இன்று முதல் வாகன ஓட்டிகளுக்குச் சற்று கசப்பான அனுபவமாக மாறவுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ள புதிய சுங்கக் கட்டண உயர்வு, ஏப்ரல் 1-ம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

டோல்கேட்
டோல்கேட்

சுங்க கட்டண உயர்வு என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் அமல்படுத்தப்படும். வாகனங்களின் வகையைப் பொறுத்து, கார், வேன், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் 5 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக 5% முதல் 10% வரை கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை (ஹோஸ்கோட்–KGF பகுதி), தபாஸ்பேட் - ஹோஸ்கோட் இடையிலான நகர சுற்றுச்சாலை, பெங்களூரு - மைசூரு விரைவுச்சாலை, கனகபுரா சாலை மற்றும் விமான நிலையச் சாலை உள்ளிட்ட முக்கிய தடங்களில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

மத்திய ஆசியாவில் நடந்துவரும் போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பண்டங்கள் விலை உயர்வை எதிர்கொண்டுள்ள பொதுமக்கள், சுங்க கட்டண உயர்வால் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுங்கக் கட்டணம் அதிகரிப்பதால், லாரி வாடகை உயரும், இதன் காரணமாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, அதன் சுமை சாமானிய மக்களைச் சென்றடையும் என வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் தோல்வியே காணாத கலைஞர்; 1984 தேர்தலில் மட்டும் போட்டியிடாதது ஏன்? | Vote Vibes

தமிழக அரசியல் வரலாற்றில் தோல்வியே காணாத தலைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி. 1957-ம் ஆண்டு போட்டியிட்ட குளித்தலையில் தொடங்கி, 2016-ம் ஆண்டு போட்டியிட்ட த... மேலும் பார்க்க

``இனி உங்களுக்கு உதவப்போவதில்லை..." - உலக நாடுகள் மீது விரக்தியில் ட்ரம்ப்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தொடங்கியப் போர் உலகளவில் பெரும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஹோர்முஸ் ஜலசந்தியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முடிவில் தொடர்ந்து இரு தர... மேலும் பார்க்க

TVK: விஜய் முன் நிறுத்தப்பட்ட `திடீர்' வேட்பாளர் - திக்குமுக்காடும் திருப்பத்தூர் தவெக!

திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க-வில், திருப்பத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருந்தவர் டாக்டர் என்.திருப்பதி. 2026 சட்டமன்றத் தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியில் சீட் எதிர்பார்த்து, அ.தி.மு.க மாவட்டச்... மேலும் பார்க்க

”எடப்பாடி பழனிசாமி பாஜக-வின் கிளைச் செயலாளராக மாறிவிட்டார்”- ஸ்டாலின் காட்டம்!

தி.மு.க தலைமையிலான மதச்சார்ப்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் முழ... மேலும் பார்க்க

தேர்தல் விதிமீறல்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளரான அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று முன்தினம் (மார்ச் 30) சென்னையிலிருந்து ரயில் மூலமாக காட்பாடிக்கு வந்தபோது, அவரின் மகனும் வேலூர் எம்.ப... மேலும் பார்க்க

"ஊழலின் பேரரசு திமுக ஆட்சி; மத்திய அரசு கொடுத்த ஒரு‌ பைசாக் கூட.!" - பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. இதையொட்டி இன்று கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப... மேலும் பார்க்க