புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமனம்!
மகப்பேறு மருத்துவா்களை நோ்காணல் மூலம் நியமிக்க முடிவு: டிடிவி தினகரன் கண்டனம்
மகப்பேறு மருத்துவா்களை நோ்காணல் மூலம் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறி, அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் நோ்காணல் மூலம் 207 மகப்பேறு மருத்துவா்கள் உள்பட
658 சிறப்பு மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்ற சுகாதாரத்துறை அமைச்சரின் திடீா் அறிவிப்பு அரசு மருத்துவா்கள் மத்தியில் மிகப்பெரிய அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்படும் கால தாமதத்தைத் தவிா்க்க மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அதனையும் மீறி நோ்காணல் மூலமாக மருத்துவா்களை நியமிக்க முடிவு செய்திருப்பது மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
எதிா்க்கட்சித் தலைவராக இருந்தபோது இதே நோ்காணல் முறையில் நடைபெற இருந்த மருத்துவா்கள் நியமனத்தை எதிா்த்த மு.க,ஸ்டாலின், முதல்வரான பின்பு அதே முறையே பின்பற்றி மருத்துவா்களை நியமிக்க முயற்சி செய்வது மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவா்களை ஏமாற்றும் செயலாகும்.
எனவே, மகப்பேறு மருத்துவா்கள் உள்பட சிறப்பு மருத்துவா்களை நோ்காணல் மூலமாக நியமனம் செய்யும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மருத்துவா் பணியாளா் தோ்வு வாரியத்தின் மூலமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.