செய்திகள் :

`மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்; புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அரசுக்கு' – உதயநிதி ஸ்டாலின்

post image

2026 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தனது தொகுதி மக்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``இரண்டாம் முறையாகச் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் என்னைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்த என் தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வெற்றியைத் தேடித்தந்த மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். அதேபோல, இந்தக் கடும் போட்டியில் களத்தில் நின்று வெற்றிக்காக உழைத்த கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

நிச்சயம் இந்த முறையும் இந்தத் தொகுதி மக்களுக்காக என்னுடைய முழு உழைப்பையும் கொடுப்பேன். என்னால் முடிந்த அனைத்து நற்பணிகளையும் எங்கள் தலைவர் காட்டிய வழியில் தொடர்ந்து செய்வேன். தமிழ்நாட்டு மக்கள் இப்போது ஒரு முடிவைக் கொடுத்திருக்கிறார்கள். மக்களின் அந்தத் தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். இந்த நேரத்தில் வெற்றி பெற்றுள்ள அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், புதிதாகப் பொறுப்பேற்க உள்ள புதிய அரசுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் எங்கள் தலைவர் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்களை அழைத்து ஆலோசனை வழங்குவார். அந்த ஆலோசனையின் அடிப்படையில் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்." என்றார்.

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க

SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்... மேலும் பார்க்க

'எதிர்க்கட்சியினருக்கு அநீதியாகிவிடும்'னு சொன்னவரு ஸ்டாலின், அதனால்.!'- சி.எஸ் அமுதன் சொல்வது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

'திராவிட கட்சிகள் திருமாவை முதல்வராக முன்மொழிய வேண்டும்' - புது ரூட்டில் சிந்தனைச் செல்வன்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டமன்றம் தான் அமைய உள்ளது. பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தவெக, பெரும்... மேலும் பார்க்க

தவெக ஆதரவுக்காக உடைகிறதா அதிமுக? – எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் குவிந்த பின்னணி என்ன?

த.வெ.க ஆதரவுக்காக வெடித்த கோஷ்டி மோதல்!தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வை வீழ்த்தி த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க... மேலும் பார்க்க