செய்திகள் :

``மக்களுக்கு பக்கோடா... சிலருக்கு அல்வா" - சர்வதேச ஆய்வறிக்கை குறித்து ஜெய்ராம் ரமேஷ் காட்டம்!

post image

இந்தியாவில் ஊதிய ஏற்றத்தாழ்வு நிகழ்வதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு வகையில் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024-2025 உலகளாவிய ஊதிய அறிக்கை, இந்தியாவில் வருமானம் ஈட்டுவோரில் முதன்மையாக இருக்கும் 10 சதவீதத்தினர், கீழ்மட்டத்தில் கடைசியாக இருக்கும் 10 சதவீதத்தினரை விட 6.8 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர் என்று கூறுகிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் - இளைஞர்கள் போராட்டம்

இது பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம் மற்றும் மியான்மர் உட்பட நமது அண்டை நாடுகளை விட மிகவும் மோசமானது. குறைந்த - நடுத்தர வருமானம் ஈட்டும் மக்களில், மிகக் குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இருப்பதை அந்த அறிக்கை விளக்கியிருக்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் சுயதொழில், வகைப்படுத்தப்படாத முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் குறைந்த ஊதியம், நிலையற்ற தன்மை நிலவுகிறது. இது பயாலஜிகளாக பிறக்காத பிரதமர் உருவாக்கிய பக்கோடா - நாமிக்ஸின் நேரடி விளைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெகுஜனங்களுக்கு பக்கோடாக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு அல்வா! நாட்டில் அதிகரித்து வரும் , வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் வருமான சமத்துவமின்மை ஆகியவற்றுக்குப் பொருளாதாரத்தை இந்த அரசு முறையற்று கையாள்வதே காரணம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

தமிழ்நாட்டிலிருந்து 67 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ஆழ்வார் சிலை; திருப்பிக் கொடுக்கும் லண்டன்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பழைமையான சவுந்திரராஜ பெருமாள் கோயில் உள்ளது.இந்த கோயிலில் 1957 முதல் 1967ம் ஆண்டுகளுக்குள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், ... மேலும் பார்க்க

Mahua Moitra: `ஒவ்வொரு சங்கி நீதிபதியும்...' - DY சந்திரசூட்டுக்கு மஹுவா மொய்த்ரா காட்டமான பதில்!

முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் நீதித்துறை குறித்து தெரிவித்த கருத்துக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா. மாநில சட்டமன்றங்கள் மற்று... மேலும் பார்க்க

அதானி விவகாரம்: `எங்களுக்கு எவ்வித கோரிக்கையும் வரவில்லை' - வெளியுறவுத்துறை கூறுவதென்ன?

அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டுகள் வைத்துள்ள நிலையில், அது குறித்து அமெரிக்கா தங்களுடன் எவ்வித தொடர்பும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை.டெல்லியில் செய்த... மேலும் பார்க்க

சேலம்: அமைச்சர் தொடங்கி வைத்த புத்தகத் திருவிழாவை புறக்கணித்ததா காவல்துறை? - சர்ச்சையும் விளக்கமும்!

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நூல்களைப் படிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தமிழக முதல்வரின் ஆலோசனைக்கிணங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், சேலத்... மேலும் பார்க்க