செய்திகள் :

"மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் யாருக்கும் பாமக ஆதரவு இல்லை!" - அன்புமணி 'ட்விஸ்ட்'

post image

வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது.

மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் அதிகம். இதனால், இந்தத் தேர்தலில் பாமக எந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது... கவனிக்கப்பட்டது.

தவெக, திமுக, அதிமுக எனக் கட்சிகள் அனைத்தும், பாமகவிடம் ஆதரவு கேட்டிருந்த நிலையில், ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

அன்புமணி ராமதாஸ் அறிக்கை
அன்புமணி ராமதாஸ் அறிக்கை

நேற்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு இல்லை!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது.

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் நடத்திய கலந்தாய்வுகளின் முடிவில், எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ட்ரம்ப் கையெழுத்து 'Done'; ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது 100% வரி விதிக்கும் ரூட் Clear?

‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்கள் எல்லாம் ரஷ்யா-உக்ரைன் போருக்கு நிதி அளிக்கின்றனர்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.ரஷ்யா மீது பல பொருளாதார தடைகள் விதித்து நெருக்க... மேலும் பார்க்க

மதுரை: பள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் நீதி கேட்டு போராடியவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன். இவர் கடந்த வாரம் முட்புதர் குட்டை ஒன்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்த... மேலும் பார்க்க

’அறிவிக்கப்படாத மின்வெட்டால் பெரும் இடி விழுந்தது போல உள்ளது’ – கோவை தொழில் துறையினர் வேதனை!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் மின் தடை காரணமாக, பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுவரை மின் தடை பிரச்சனை இல்லாமல் இருந்து வந்த தொழில் நகரமான கோவையிலும் கடந்த 2 ந... மேலும் பார்க்க

மீனாட்சி அம்மன் கோயில்: 'புனித நீர்தெளிப்பு, நீதிபதி அவமதிப்பு?' - அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம்

'புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதா? நீதிபதி அலட்சியப்படுத்தப்பட்டாரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என்று அர்ச்சகர் பய... மேலும் பார்க்க

“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது” - உதயநிதி

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்."தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்; தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் க... மேலும் பார்க்க

'உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்...' - முதல்வர் விஜய்யின் இடைத்தேர்தல் பிரசார பிளான் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. தவெக சார்பில் இரண்டு தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய்யே களமிறங்கி பிரசாரம் செய்யவிருக்கிறார். இடைத்தேர்தலும் முதல்வர் விஜ... மேலும் பார்க்க