செய்திகள் :

மதுரை: 'நீல நிறப் பால்பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் நெடி' - புகாருக்கு ஆவினின் விளக்கம் என்ன?

post image

மதுரை மாநகர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையிலிருந்து நாள்தோறும் 1.9 லட்சம் லிட்டருக்கு மேல் பால் விநியோகம் செய்யப்படுகிறது.  

மதுரை புறநகர் பகுதியான உசிலம்பட்டி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, சிலைமான், வலையங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மாநகரப் பகுதிகளிலும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவின் பால் பூத்களுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்ட முழுவதும் ஆவின் டெப்போக்களில் விற்பனை செய்யப்படும் நீலநிற பால்பாக்கெட்டுகளில் ப்ளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற நெடி வீசுவதாகக் கூறி மாடக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆவின் டெப்போக்களில் இருந்து நீலநிற பால்பாக்கெட்டுகளில் உள்ள பால் மாதிரிகளைச் சேகரித்தனர். மேலும் சாத்தமங்கலம் ஆவின் பால்பண்ணையில் இருந்தும் பால் மாதிரிகளை எடுத்துசென்று ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குழந்தைகள், நோயாளிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் பிரதானமாகப் பயன்படுத்தபடும் ஆவின் பால்பாக்கெட்டுகளில் மதுரை மாவட்டத்தில் ப்ளாஸ்டிக் மற்றும் குளோரின் நெடி வருவதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் நிறுவனம்
ஆவின் நிறுவனம்

இது குறித்து மதுரை ஆவின் நிர்வாகம் தரப்பில் அளித்த விளக்கத்தில், “ஆவின் நீலநிற பால்பாக்கெட் தொடர்பாகப் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. நீலநிற பால்பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் பேப்பர் ரோலில் ஏற்பட்ட குறைபாடுகளால் நெடி வீசியது தெரியவந்து தற்போது புதிய பால்பாக்கெட்டுகள் மாற்றப்பட்டுள்ளது.

பால்பாக்கெட்டுகளைத் தரமின்றி அளித்த நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பா, நடவடிக்கையா என்பது முழுமையான விசாரணைக்குப் பின்னர் முடிவு அறிவிக்கப்படும்” என்றனர்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க