செய்திகள் :

'பட்டதாரிகள் ப்ளம்பர்கள் ஆக வேண்டுமா?' - தவெக அமைச்சரின் புதிய சமூக நீதி?

post image

மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களின் கல்வி குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசியிருக்கும் விதம் சர்ச்சையாகியிருக்கிறது.

அமைச்சரின் உரையில் இருந்த சிக்கல் என்ன? ஏன் அந்த உரை விமர்சனமாகிறது?

CTR. நிர்மல் குமார்
CTR. நிர்மல் குமார்

வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் அமைச்சர் நிர்மல் குமார், ''நான்கு ஆண்டுகளாக ஒரு பெண் நீட் எழுதி நல்ல மார்க் எடுத்திருக்கிறார். ஆனால், அவருக்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை. அவரை நான் வழக்கறிஞர் ஆக சொன்னேன். பொறியியல் படிப்புக்கு இப்போது மதிப்பே இல்லை.

தச்சு வேலை செய்பவருக்கும் ப்ளம்பருக்கும் கூட இப்போது அதிக டிமாண்ட் இருக்கிறது. எலக்ட்ரிசியனாக ஏ.சி மெக்கானிக்காகவோ பயிற்சி பெற்று 10 ஆண்டுகள் பணி செய்தால் நீங்கள் சிறப்பான நிலையை எட்டலாம்'' எனப் பேசியிருக்கிறார்.

அமைச்சரின் இந்த உரையை திமுக ஐ.டி.விங் கையிலெடுத்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

எந்தப் பக்க சார்பும் இல்லாமல் பார்த்தாலும் அமைச்சரின் உரையில் அத்தனை அபத்தங்கள் இருப்பதைக் கவனிக்க முடிகிறது. தமிழ் சமூகம் கல்வியால் முன்னேறிய சமூகம்.

ஏனைய மாநிலங்களோடு தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் தமிழ்நாடு தனித்த பெருமையைப் பெறுவதற்கு அதன் கல்விச் செறிவுதான் மிக முக்கிய காரணம்.

CTR Nirmal Kumar - TVK
CTR Nirmal Kumar - TVK

காமராஜர் காலம் தொடங்கி திராவிட கட்சிகள் தொட்டு சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்போருக்கும் கல்வி சென்று சேர இங்கே இமாலய வேலை செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் பணி ஓயவில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டிய பொறுப்பு எப்போதும் இருக்கிறது.

இப்படியொரு சூழலில் 'படித்தால் வேலை கிடைக்காது...' அல்லது 'விருப்பப்பட்ட படிப்பு கிடைக்கவில்லையெனில் கிடைத்ததை விருப்பப்பட்டு படி' எனப் பேசுவதெல்லாம் தன்னுடைய பதவிக்கு இருக்கும் பொறுப்பை உணராமல் பேசும் ஆபத்தான கருத்தாகவே இருக்கிறது.

ஒரு மாணவியின் கல்வித் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவை தனிப்பட்ட மாணவர் பெற்றோருடைய பொறுப்பு மட்டும்தானா? கொள்கை வகுக்கும் இடத்தில் இருப்போருக்கு அதில் பொறுப்பே இல்லையா? அமைச்சரின் பேச்சு அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதைப் போலத்தான் இருக்கிறது.

நான்கு முறை நீட் எழுதி நல்ல மதிப்பெண் எடுத்த மாணவிக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கவில்லையெனில், அந்த மாணவியின் பின்னணி என்னவென்பதை அறிய வேண்டும்.

அவர் நீட்டில் நல்ல மதிப்பெண் எடுத்து டாக்டர் ஆக முடியவில்லையெனில் அது அந்த மாணவியின் தவறா இல்லை இந்த அமைப்பின் தவறா? அந்தத் தவறுக்கு மாணவி பொறுப்பேற்க வேண்டுமா? இல்லை கொள்கை வகுக்கும் இடத்தில் இருக்கும் அரசியலர்கள் பொறுப்பேற்க வேண்டுமா? மருத்துவம் இல்லையெனில் வழக்கறிஞர் ஆகலாம் எனப் பேசினால், இன்னும் எத்தனை மாணவிகளை அப்படி வழக்கறிஞர் ஆக்குவீர்கள்?

அமைச்சர் நிர்மல் குமார்
அமைச்சர் நிர்மல் குமார்

பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது, மதிப்பு இல்லை என்றும் அமைச்சர் பேசுகிறார். இதை நினைத்தும் மாணவர்தான் கவலைப்பட வேண்டுமா? பொறியியல் படிப்புகளுக்கு மதிப்பில்லை எனில் அது மாணவர்களின் சிந்தனையைத் தூண்டாத கல்வி முறையின் பிரச்னை.

பொறியியல் படித்தவர்களுக்கு வேலை கிடைக்காது எனில், குற்றஞ்சாட்ட வேண்டியது மாணவர்களை அல்ல. முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க தவறிய அரசுகளும் கொள்கை வகுப்பாளர்களும் எப்போதுதான் பொறுப்பை ஏற்பீர்கள்?

லயோலா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமில் பெருந்திரள் கூட்டமாக நின்ற மாணவர்களை அமைச்சர் கவனிக்கவே இல்லையா? அது ஒரு அரசு சுதாரித்துக் கொள்ள வேண்டிய இடம்.

புதிதாக வந்திருக்கும் அரசு, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான சமிக்ஞை. அதை அரசு கவனித்திருந்தால் அமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல் பேசியிருக்கமாட்டார்.

தச்சருக்கும் ப்ளம்பருக்கும் அதிக டிமாண்ட் இருக்கிறது என அமைச்சர் நிர்மல் குமார் சொல்லும் பாய்ண்ட் யதார்த்தமானது. அதற்காக பட்டதாரிகளை ப்ளம்பர்களாகச் செல்லுங்கள் எனும் தொனியில் பேசுவது எப்படிச் சரியாக இருக்கும்? இப்போதுதான் ப்ளம்பர்களின் பிள்ளைகள் முதல் தலைமுறை பட்டதாரிகளாகப் படித்து ஏற்றம் பெற்று வருகின்றனர்.

அவர்களுக்கான ஏதுவான சமூக சூழலை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. மேலும், எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் தேர்வாக இருக்க வேண்டும். அது சமூக திணிப்பாக அதிகாரத்தின் திணிப்பாக இருக்கக்கூடாது.

நிர்மல் குமார்
நிர்மல் குமார்

கொள்கை வகுக்கும் இடத்தில் இருப்போர் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விவகாரங்களில் தங்கள் பதவியின் கனத்தையும் பொறுப்பையும் உணர்ந்து வார்த்தைகளை அவிழ்க்க வேண்டும்.

மதுரை: 'நீல நிறப் பால்பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் நெடி' - புகாருக்கு ஆவினின் விளக்கம் என்ன?

மதுரை மாநகர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையிலிருந்து நாள்தோறும் 1.9 லட்சம் லிட்டருக்கு மேல் பால் விநியோகம் செய்யப்படுகிறது. மதுரை புறநகர் பகுதியான உசிலம்பட்டி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி,... மேலும் பார்க்க

அமைச்சர்களுக்கு இலாகா இல்லை, பட்ஜெட்டுக்கு திட்டம் இல்லை! - புதுச்சேரியை முடக்கிய முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நடப்பு நிதியாண்டில் சட்டசபை தேர்தல் குறுக்கிட்டதால் பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் முதல் ... மேலும் பார்க்க

வடலூர்: கைவிடப்பட்டதா ரூ.100 கோடி திட்டம்? - வள்ளலார் சர்வதேச மையம் விவகாரத்தில் நடப்பது என்ன?

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கிறது வள்ளலார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சத்திய ஞானசபை. `வள்ளலாரின் கருத்துகளை பரவலாக்கும் விதமாக வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்’ என்று, 2021 சட்ட... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி: வழக்கின் நிலை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் உத்தரவு!

பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலம் மோசடியாக தனி நபர்கள் பெயருக்கு பதிவு செய்ய முயன்ற சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதி... மேலும் பார்க்க

வந்தே மாதரம்: `அரசியல் நிர்ணய சபை முடிவுக்கு எதிரானது; இந்து தேசிய முயற்சி!' - எம்.பி ஆ.ராசா கண்டனம்

இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தேசியப் பாடலாக வந்தே மாதரத்தை அறிவிப்பதோடு, அதை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை பா.ஜ.க அரசு தாக்கல... மேலும் பார்க்க

தேனி: கோமா நிலையில் சிறுவன்; `அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சைதான் காரணம்' - உறவினர்கள் போராட்டம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார். இவர் கடுமையான சளி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன... மேலும் பார்க்க