செய்திகள் :

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

post image

மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள்  பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்து பெட்ரோல் போட சொல்லியுள்ளனர். பங்க் ஊழியர் திருமுருகன் பெட்ரோல் போட்டு கொண்டிருக்கும்போதே பெரிய கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களை ஏந்தியவாறு வண்டியிலிருந்து இறங்கிய இருவர் திருமுருகனை மிரட்டி அவரிடமிருக்கும் பணத்தைக் கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியைடைந்த திருமுருகன் செய்வதறியாது நின்றுள்ளார். அப்போது அவரிடம் இருக்கும் பணத்தை எல்லாம் பறித்து கொண்டு சாவகசமாக வண்டியில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். 

இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தச் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும், பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, தப்பியோடிய மர்ம தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது!

திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த ... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க

கரூர்: மர்மமான முறையில் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு; உறவினர்கள் தர்ணா! - போலீஸார் விசாரணை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், போத்து ராவுத்தன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பாலசுப்பிரமணியம் என்பவர் பணியாற்றி வந்தார். பாலசுப்பிரமணியம், தனது மனைவி நீலவ... மேலும் பார்க்க

காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண்; தலையணையால் அமுக்கி மகனையும் கொன்றுவிட்டு நாடகம்!

பெங்களூருவில் உள்ள பசவேஷ்வர் நகரில் தனது மனைவி ஹரினி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்தவர், அபிநந்தன். இவர் தனது மகனுடன் வீட்டில் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். இது குறித்து ஹரினி போலீஸாரை ... மேலும் பார்க்க

சென்னை: கை, கால்கள் கட்டி, வாயில் துணி அடைத்து இளைஞர் கொலை - போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த கொடூரம்

காஞ்சிபுரம், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரின் மகன் அருண்குமார் (39). இவர் செம்பாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்ப... மேலும் பார்க்க

தருமபுரி: நகைக்காக மாமியாரைக் கொன்று குவாரி குட்டையில் வீசிய திமுக நிர்வாகி; நண்பர்களுடன் கைது

நகைக்காக மாமியாரைக் கொலை செய்து சடலத்தை குவாரி குட்டையில் வீசிய சம்பவத்தில் திமுக ஒன்றிய அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய... மேலும் பார்க்க