செய்திகள் :

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள பிரபல திரையங்கு கட்டிடத்தில் தீ விபத்து!

post image

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மேற்கு கோபுரம் அருகேயுள்ள மேற்கு கோபுர வீதி பகுதியில் 1939ஆம் ஆண்டு முதல் பழமையான சென்ட்ரல் தியேட்டர் செயல்பட்டுவந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் போதிய ரசிகர்கள் வருகையின்மையால் தியேட்டர் மூடப்பட்டது.

இதையடுத்து சென்ட்ரல் தியேட்டர் கட்டிடத்தில் கீழ் பகுதி வாகன நிறுத்துமிடமாகவும், மேல்தளம் பொம்மை விற்பனை நிறுவனம் ஒன்றின் குடோனாகவும் செயல்பட்டுவந்தது.

மீனாட்சியம்மன் கோவில் குடமுழக்குவிழா வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் யாகசாலை நேற்று மாலை தொடங்கியது. இந்நிலையில் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி பழமையான கட்டிடங்கள் குறித்து தீயணைப்புத்துறையினர் சோதனை நடத்திவந்தனர். 

இதனிடையே மேற்கு கோபுரம் அருகேயுள்ள பழமையான சென்ட்ரல் தியேட்டரின் முதல்தளத்தில் உள்ள பொம்மை பொருட்கள் குடோனில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீயானது பரவ தொடங்கி மளமளவென பற்றி எரிந்து  நகர் முழுவதிலும் கரும்புகை வானுயர அளவிற்கு எழும்பி பறந்தது.

மதுரையில் தீ விபத்து

இதையடுத்து குடமுழக்கு பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த தீயணைப்பு நிலைய வாகனங்கள் மற்றும் தீயணைப்புத்துறையினரும் 

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டாலும் பழமையான கட்டிடம் என்பதால்... ஒரு புறம் இடிந்துவிழுந்துள்ள நிலையில் முழுமையாக இடிந்து விழும் அபாயம் உள்ளதால் தீயணைப்புத் துறையினரும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு போராடி  தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து குறித்து விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் திடீரென பழமையான கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணியின்போது விபத்து - இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளிகள்; இருவர் பலி?

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள மஞ்சு கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சி.எஸ்.ஐ சியோன் மலை தேவாலய நிர்வாகத்தின் சார்பாக போதகர் ஜோன் கிருபாகரன் என்பவரால் புதிதாக பெரிய தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருக... மேலும் பார்க்க

மதுரை: லாரியிலிருந்து விழுந்த இரும்புப் பொருள் - ஜல்லிக்கட்டு நண்பர்கள் இருவர் உயிரிழந்த சோகம்

சோழவந்தான் அருகேயுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால் மற்றும் அய்யனார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமின்றி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்த மாடுபிடி வீரர்கள்.ப... மேலும் பார்க்க

சரிந்து விழுந்த 5 மாடி மாணவர் விடுதி: 6 பேர் உயிரிழந்த சோகம் - மீட்புப் பணி தீவிரம்

தெற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் சுமார் 30 ஆண்டுகள் பழமையான 5 மாடி கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்களுக்கான விடுதியாகச் செயல்ப... மேலும் பார்க்க

"பார்க்கவே முடியாத கோரமான காட்சி" - திருச்சூர் விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மரணம்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​ ... மேலும் பார்க்க

நேபாளம்: சடலங்கள் கிடைக்காததால் பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு - நெஞ்சை உலுக்கும் சோகம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில... மேலும் பார்க்க

Nepal: ஒரே கட்டடத்துக்குள் 24 சடலங்கள்; சேற்றுக்குள் உறைந்த உடல்கள் - போராடி மீட்ட மீட்புக்குழு

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில... மேலும் பார்க்க