செய்திகள் :

மதுரை: லாரியிலிருந்து விழுந்த இரும்புப் பொருள் - ஜல்லிக்கட்டு நண்பர்கள் இருவர் உயிரிழந்த சோகம்

post image

சோழவந்தான் அருகேயுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால் மற்றும் அய்யனார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமின்றி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்த மாடுபிடி வீரர்கள்.

பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் இணைந்து களமிறங்கி பரிசுகளையும் வென்றுள்ளனர். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு கோபாலும் அய்யனாரும் இருசக்கர வாகனத்தில் மதுரை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். நகரி பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புப் பகுதியில் வாகனங்கள் செல்லும்போது நிலைதடுமாறும் வகையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த நேரத்தில், அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத கனரக லாரியிலிருந்து பெரிய இரும்புப் பொருள் ஒன்று திடீரென தவறி சாலையில் விழுந்துள்ளது. அந்த இரும்புப் பொருள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கோபால் மற்றும் அய்யனார் மீது பலமாக மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி அங்கு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவந்தான் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் கனரக வாகனத்தை அடையாளம் காணும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த அய்யனார்
விபத்தில் உயிரிழந்த அய்யனார்

ஒரே கிராமம், நெருங்கிய நட்பு, ஜல்லிக்கட்டு களத்தில் இணைந்து வென்றவர்கள்... வாழ்க்கையிலும் இணைபிரியாமல் இருந்த நண்பர்கள் இருவரும் ஒரே விபத்தில் உயிரிழந்திருப்பது சித்தாலங்குடி மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும், நகரி பகுதியில் உள்ள சாலைத் தடுப்பு மற்றும் அங்கு நிலவும் போக்குவரத்து பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரிந்து விழுந்த 5 மாடி மாணவர் விடுதி: 6 பேர் உயிரிழந்த சோகம் - மீட்புப் பணி தீவிரம்

தெற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் சுமார் 30 ஆண்டுகள் பழமையான 5 மாடி கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்களுக்கான விடுதியாகச் செயல்ப... மேலும் பார்க்க

"பார்க்கவே முடியாத கோரமான காட்சி" - திருச்சூர் விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மரணம்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​ ... மேலும் பார்க்க

நேபாளம்: சடலங்கள் கிடைக்காததால் பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு - நெஞ்சை உலுக்கும் சோகம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில... மேலும் பார்க்க

Nepal: ஒரே கட்டடத்துக்குள் 24 சடலங்கள்; சேற்றுக்குள் உறைந்த உடல்கள் - போராடி மீட்ட மீட்புக்குழு

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில... மேலும் பார்க்க

கோவை: அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடித்து விபத்து - தீக்கிரையான 50 வீடுகள்!

கோவை நவஇந்தியா பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்குவதற்காக அப்பகுதியில் தகரத்திலான தற்காலிக குடியிருப்புகள்... மேலும் பார்க்க

Nepal: `நேபாளத்துக்கு மீண்டும் 72 மணி நேரத்தில் ஆபத்து' - சீனா எச்சரிக்கை | முழு விவரம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், அங்கு மற்றொரு இயற்கை பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சீனா எச்சரித்துள்ளது. நேப... மேலும் பார்க்க