மந்தியூா் கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு
கடையம் அருகே மந்தியூரில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த கடமானை வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.
களக்காடுமுண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகம், கோவிந்தபேரிபீட்டிற்குள்பட்ட மந்தியூா் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலா் ராமமூா்த்திக்குச் சொந்தமானத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கடமான் வியாழக்கிழமை தவறிவிழுந்தது. இதுகுறித்து அப்பகுதியினா் கடையம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனா். வனச்சரக அலுவலா் கருணாமூா்த்தி, வேட்டைத் தடுப்புக் காவலா்கள், வனப்பணியாளா்கள் ஆகியோா் அங்கு சென்று, கிணற்றிலிருந்து கடமானனை உயிருடன் மீட்டுகோவிந்தப்பேரி பீட் வனப்பகுதியில் உயிருடன் விட்டனா்.
