செய்திகள் :

மனம் என்னும் மாயக்கண்ணாடி! - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

"அம்மா.. "

அழைத்தாள் சம்ருதி..

"சொல்லு மகளே.."

"உங்க கிட்ட  சில கேள்விகள் கேட்கணுமே.."மெதுவாய் கேட்டாள்..

"கேளேன் மகளே.. இதிலென்ன தயக்கம் உனக்கு" தாய்  மகளுக்கு வினாவோடு பதில் தர..

"இல்லம்மா.. நீங்க சரியான பதில் தருவீங்களான்னு தான்.."

அழகிய பொதும்பரில்  நடைப்பயின்று கொண்டிருந்தனர் தாயும் மகளும்..

தாயை கண்டதும் சட்டென  மலர்ந்து சிரித்து  தலையசைத்து வரவேற்ற வண்ண பூக்களை கருணையோடு வருடி கொடுத்த தாயவள்.. சட்டென மகளை ஒரு கனம் உறுத்தாள் .. "நீ கேட்கும் கேள்வி சரியானது என்றால் என் பதிலும் சரியாய் தான் இருக்கும்  மகளே"

"ஏம்மா எப்போ பார்த்தாலும் இப்படி அதீத அலங்காரத்தோடு, இத்தனை நகைகளோடு, இதில் கையில் சூலத்தோடு எப்போவும் வலம் வரீங்களே.. உங்களுக்கு எப்போதும் இதை சுமக்க கஷ்டமா இல்லையா.."கேட்டாள் சம்ருதி..

கல கலவென அன்னை நகைத்த நகைப்பில் பச்சை புற்கள் சிலிர்த்து தலையாட்ட, "மகளே என் விருப்பத்துக்கு இந்த அலங்காரம் இல்லை.. நீ அறிய மாட்டாயா.. நீங்கள் தந்ததுதானே இந்த உருவம், வண்ணம் அலங்காரம் எல்லாமே.."

"என்னம்மா  இது .. இந்த உலகை படைத்த உனக்கு.. உன் விருப்பபடி,  உடையோ, நகையோ அணிய முடியாதா.." வியப்பு மேலிட கேட்டாள் சம்ருதி..

மீண்டும் கொஞ்சம் சத்தமாய் நகைத்த தாயவள் :" இப் புவியை படைத்தவள் நான் என்பதையும் நீங்க தான் சொல்லுறீங்க, எனக்கு எத்தனை உருவம், எவ்ளோ பெயர்கள் என்பதும் நீங்க அழைக்கும் போதுதான் தெரிகிறது..நானும் உங்க விருப்படியே வாழ பழகிட்டேன்..எனக்கென்று எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாமலே.. உண்மையை சொன்ன இந்த அலங்காரங்கள் இல்லையெனில்  நீங்களே என்னை  அம்மன் என்று ஒத்துகொள்ள  மாட்டிங்களே"

பேச்சை மாற்ற நினைத்த சம்ருதி.. "அம்மா.. இந்த செடி கொடிகளுக்கு மொழி உண்டா அவைகள் ஒன்றோடொன்று பேசுமா..?" என வினவ..

"ம்ம்..பேசுவது மனித உரிமை மட்டும் தானா.. இப் பிரபஞ்சத்தில் இருக்கும்  எல்லா உயிருக்கும்  அவ்வுரிமை உண்டு அதற்கென பரிபாஷையும் உண்டு "

"அம்மா.. எனக்கு அந்த செடிங்க பேசுறதை கேட்கணும் போல ஆசையா இருக்கு.. எனக்கு கேட்க செய்யுங்களேன்.. ""வேண்டாம் மகளே அவங்க பரிபாஷையில் மனிதம் தலையிடுவதை விரும்ப மாட்டாங்க.. அதுவும் இல்லாமல் தொந்திரவு செய்ய வேண்டாமே நாமும்.. "

"ஷ் ஷ்.. என்னம்மா நீங்க" என்று சம்ருதி சிணுங்க..

எதிரில் வந்த இருவர்.. இவளை வித்தியாசமாய் பார்த்து செல்ல.. 

ஒருவரோ.. "என்ன பகலிலே கனவு கண்டுட்டு போகுது போல "என்று சொல்லி செல்ல..

இன்னொருவனோ.. "காதல் பித்து தலைக்கேறிடிச்சு போல.. தானா சிணுங்கிட்டு போகுது  இது எங்க போய் முடியுமோ.. "சற்று சத்தமாமே பேச..

கூட வந்தவன் "சந்தேகம் என்ன  ரெண்டு வீட்லயும்  குடுமி பிடி சண்டையில் முடியும்" என்றே சிரிக்க..

இவ் வார்த்தைகள் விருப்பம் இல்லை என்றாலும் சம்ருதி செவி மோத சற்றே முகம் சுருங்கி தாயவளை நோக்க..

உடன் நடந்த தாயோ தாயோ புன்னகை மாறாமல் ஓர கண்ணில் சம்ருதியை 

பார்த்துவிட்டு நடக்க..

"அம்மா..எப்படி பேசிட்டு போறாங்க பாருங்க "என்றே மகளவள் குற்றம்  சொல்ல..

"அது உன்னை பார்த்த சூழல் அப்படி..நீ தனியா பேசுறதை பார்த்து அவங்களுக்கு என்ன தோணித்தோ  அதை பேசிட்டு போறாங்க "

"ஆமா அவங்க கண்ணுக்கு நீ தெரியமாட்டே இல்ல .. இந்த மனுசங்களே அப்படித்தான் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டாங்க.. அவங்க சொல்லம்பு   மத்தவங்க மனசை எப்படி தைக்கும்ன்னு உணர்வதே இல்லை சட்டுனு பேசிட வேண்டியது..அம்மா இந்த அழகான வனம் மனசை ரெம்பவே ஈர்க்குது.. தோ அந்த பவள மல்லி மரத்தடியில் கொஞ்சம் நேரம் அமர்வோமா  "

"உன் விருப்பம் மகளே.."தாயவள்

 சொல்லவும்..

பவள மல்லி மரம் தன் பசும்கரம் நீட்டி அழகாய் குடை விரித்து இருக்க..பவளமும் வெண்முத்தும் இணைந்த நிறம் வெகு அழகாய் இருக்க.. கால் வைக்கவே கூசும் அளவுக்கு நேற்று அலர்ந்த மலர்கள் உதிர்ந்து கிடக்க.. அதனை மென்மையாய் தள்ளிவிட்டு இருவரும் அதன் வேரிலேயே அமர்ந்தனர் . தாயவளின் கரம்  வருடிய நொடியில் வாடிய மலர்கள் எல்லாம் மலர்ச்சியுற்று சிரித்தது..

அதனை  கண்ட சம்ருதி, "அம்மா நீங்க தொட்டதும் வாடிய பூவெல்லாம் சிரிக்க ஆரம்பிச்சுடுச்சே..உன்னால் மட்டுமே உதிர்ந்த பூவையும் மலர வைக்க முடியுதே.. பிறகு ஏன்மா பூக்களை மலர வைத்து உதிர வைக்கிறாய்.. அப்படியே விட்டுடுலாம் இல்ல.அதுப்பாட்டுக்கு அழகா சிரிச்சுகிட்டே இருக்குமே.."

"இல்லை மகளே...!அது இயற்கைக்கு முரணானது அன்றோ.. மலர்ந்த பூக்கள் அப்படியே இருந்து விட்டால் பிரபஞ்ச சுழற்சியில் மாற்றம் இன்றி அப்படியே ஸ்தம்பித்து விடாதா.. பிறகு எப்படி புது வரவுகள் உருவாகும்.. மனிதமும் அது போலத்தான் சுழற்சியாய் வந்துகிட்டே இருக்க வேண்டியது இயல்பாக..அதனை ஏன் தொந்திரவு செய்ய வேண்டும்.."

மீண்டும் ஏதோ வினாவை தொடுக்க நினைத்த சம்ருதியை இரு பெண்கள் உற்று நோக்க அமைதியாய் பூக்களை கவனிப்பதை போல பாவனை செய்தாள்..

அப்  பெண்கள் இருவரும் சற்று தள்ளி இருந்த புன்னை மரத்தடியில் அமர்ந்து, மகிழ்வாய் பேசி சிரிக்க..

அவர்களை உற்று நோக்கிய சம்ருதி "அவங்களை பாத்தீங்களா அம்மா எவ்ளோ மகிழ்ச்சியா.. உலகின் மொத்த சந்தோஷமும் இவங்கங்கிட்டதான் இருக்கு என்பது மாதிரி பேசிட்டு இருக்காங்க இல்ல.. அவங்க மலர்ச்சியான பேச்சையும் முகத்தையும் பார்த்தா, சொல்லாமலே அவங்க மலர்ச்சி நம்மையும் தொத்திக்கிதே.."சம்ருதி சிலாகிக்க..

தாயவளோ  மர்ம புன்னகை பூக்க..

அப் பெண்களும் வெகுநேரம் பேசிக்கொண்டே சிரிக்க..

"அம்மா எனக்கு ஒரு ஆசை "என்றாள் சம்ருதி வேகமாய்..

என்ன என்பது போல தாயும் திரும்பி பார்க்க..

"அவங்க பேசி சிரிப்பது மகிழ்ச்சி தான் ஆனாலும் அதிலும் ஏதோ செயற்கை தனம் இருக்க போல தோணுது அதனால.."


"அதனால் "

"அவங்க உண்மையிலேயே மகிழ்ச்சியா தான் பேசுறாங்காலானு  தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு அம்மா "

"அதெப்படி உன்னால் முடியும் மகளே.."

"என்னால முடியாதுன்னு  ஆனா உங்களால் முடியுமே ..எம் மேல ஆணையா மறுக்க கூடாது "என்றாள் சம்ருதி 

"அப்போ ஏதே வில்லங்கமாய் தான் கேட்க போறேன்னு புரியுது.."

"அம்மா என்கிட்டவேவா.. இன்னுமா நான் என்ன கேட்பேன்னு  தெரியல சரி வாய்விட்டே கேட்கிறேன்.. எனக்கு அவங்க மனசை ஊடுருவி பார்க்கும் சக்தி வேணும்.."

"யேய் சம்ருதி இதென்ன விபரீத ஆசை.. இதெல்லாம் இயற்கைக்கு முரணானது வேண்டாம் " தாயவள்  பதற்றமாய் சொல்லிட..

"அம்மா.. மருத்துவத்தில் கூட மனிதனின் ஆழ் மன எண்ணங்களை அறியத் தானே செய்றாங்க அப்போ அது இயற்கை முரண் இல்லையா..!" சம்ருதி வினவ..

"அது அவர்களின் நல்வாழ்க்கைகான . வைத்தியம் அதை குறை சொல்ல முடியாது.."

"அது சரி என்கிற போது இதுவும் சரியேம்மா.. நான் அவங்க மகிழ்ச்சி உண்மையா என்று அறியவே  விரும்புகிறேன் அவ்ளோதான்.. இதனால் அவங்களுக்கு எந்த கெடுதலும் விளைய போறது மில்லை.. அம்மா தயவு செய்து கொஞ்சம் நேரம் மட்டும் அவங்க மனசை ஊடுருவும் சக்தி வேண்டும் "சம்ருதி கெஞ்ச..

"சரி உன் விருப்பப்படியே ஆகட்டும்.. நீ அந்த பெண்களை சற்று உன்னித்து பார்.. அவர்களின் ஆழ்மன எண்ணம் புரியும்.. "தாய் சொல்ல..

நன்றி நன்றி அம்மா.. சம்ருதி மகிழ..

".........."

முதல் பெண் "ஏண்டி  மனோ இந்த நெக்லஸ் ரெம்ப அழகா இருக்கே எங்க வாங்கின, அதுவும் இந்த புடவைக்கு ரெம்ப பொருத்தமா இருக்கு" என கேட்க.. 

"அதுவா  அக்கா  அவரு பத்துநாளுக்கு முன்னாடி துபாய் போய் இருந்தாங்க இல்ல  அப்போ வாங்கிட்டு வந்தாரு "இரண்டாவது பெண் பதில் சொல்ல..

முதல் பெண்ணிண் மனமோ.. "இவ இருந்த இருப்பு என்ன..இன்னைக்கு நகையும் புது புடவையுமா பவ்ஸு காட்டுறதென்ன ஹூம்" என்று பெருமூச்சாய் விட..

இரண்டாம் பெண்ணின் மனமோ,, "எவ கண்ணில் பட கூடாதுன்னு நினைச்சு கிளம்பினனோ  அவ பார்வையிலே பட்டு அவ கூடவே கிளம்பவேண்டியதா போச்சே, ஆத்தா   மாரியாத்தா போயும்போயும் இவ கிட்ட சிக்க வச்சுட்டியே.. "என்று மனதினுள் புலம்ப..

ஆனால்..

இரு பெண்களும் மேலுக்கு இன்னும் அன்பாக தான் பேசிக் கொண்டு இருந்தனர்..

மேலும் இரு கல்லூரி பெண்கள் கலகலவென்று பேசிக்கொண்டே மெதுவாய் சம்ருதியை கடக்க..அவர்களின் ஆழ்மன எண்ணமும் கேளாமலே இவளுக்கு கேட்டது..

ஒரு பெண்  "இவ எல்லாம் படிச்சுட்டு இருப்பா..கேட்டா படிக்கலன்னு சொல்லுவா நான் தான் இன்னும் படிக்கல நாளைக்கு எக்ஸாம் கண்டிப்பா ஊத்திக்கும்.. என் அம்மா கிட்ட ஆயிரத்தெட்டு  அர்ச்சனை விழப்போவது கான்போர்ம்.." என நினைக்க..

மற்றவளோ.. "இவ போட்டுட்டு வர எல்லா ட்ரெஸ்சும் ரெம்ப அழகா இருக்கு.. நமக்கு ஒழுங்கா பீஸ் கட்டவே காசு இல்ல இதுல புது ட்ரெஸ் எங்க எடுக்க முடியும்.."ஏக்க பெருமூச்சு விட்டாள் மனதுள்..

'ச்சே இதென்ன டா 'என்று தலையை உலுக்கி கொண்டாள் சம்ருதி..

மேலும்..


இரு நடுத்தர ஆண்கள்.. இவர்களுக்கு நேர் பின்புற மரத்தடியில் அமர்ந்து, தங்களின் வேலை அனுபவங்களை, மேலதிகாரிதியிடம் எப்படி வேலை செய்தாலும் நல்ல பெயர் பெற முடியவில்லையே  என்று பேசி கொள்ள..

முதல் ஆள், "ஆமா வேணு உன்னோட ஆன்சைட் விஷயம் என்ன இப்படி ஆயிடுச்சே, அந்த விஷ்ணு வேணுனே உன்னை வச்சு செஞ்சுட்டான் போல.."

"ம்ம் ஆமா ப்பா  என்னவோ என் மேல கடுப்பு போல.. அதை இப்போ வெளி காட்டிட்டான்.." வேணு ஒப்புக்கொள்ள.

"ம்ம் எல்லாம் வாங்குற காசுக்கு நியாயமா உழைக்கணும்னு நினைக்கிறோம் இல்ல அதான் கடுப்பு அவங்களுக்கு கூளை கும்பிடு போட தெரியல நமக்கு வேற என்ன  " வெளியே வாய் பேச.. 'ஆழ்மனமோ  வேணும்டா உனக்கு.. உன்னை விட ரெண்டு வருஷம் சீனியர் நான் எனக்கே இன்னும் ஆன்சைட்  வாய்ப்பில்லை.. நேத்து வந்த உனக்கு மட்டும் உடனே கிடைக்க விடுவமா' என எண்ணிட..

"ஆமாங்க.." என்ற வேணுவின் மனமோ 'வெளிநாட்டு வாய்ப்பை எண்ணி போட்ட திட்டங்கள் அத்தனையும் தவிடு பொடியாய் தகர்ந்து போனதில் மிகுந்த மன உளைச்சல்க்கு உள்ளானதை நினைந்து வருந்த.. இவனும் அதில் ஒரு உள் ஆள்தானே.. இப்போ நான் எப்படி வருந்துகிறேன் என்பதை பார்த்து சந்தோசபட்டு ஒப்புக்கு ஆறுதல் சொல்ல வந்துட்டான் போல' வென நினைத்தான்..

தலை சுற்றுவது போல இருந்தது சம்ருதிக்கு..

பின்னும்..

அவளை கடந்த முதுமை ஒன்று, தன் பிள்ளைகள் வீட்டில் படும் பாட்டை சக முதுமையிடம் சொல்லிட.. அவரோ புன்னகை மாறாமல் தோழமைக்கு ஆறுதல் சொல்லியது..

"நீ எளிதாக தேறுதல் சொல்லிட்ட ஆனா என்னால ஜீரணிக்க முடியலையே.. உன் பிள்ளைகள் மாதிரி நல்லவங்களா இல்ல என் பிள்ளைகள்" என்று விடாது புலம்ப..

"விடு ரத்தினா, இப்போ வேலை பளுவும், சூழ்நிலையும் அப்படி நடக்க வச்சுடுத்து அவங்களை.. மத்த படி எல்லா பிள்ளைகளும் நல்லவங்க தான் என்று ஆறுதல் படுத்த, அவரின் மனமோ,, ' நீயாவது வாய்விட்டு புலம்பி மனசை தேத்திக்கிற.. ஆனா எனக்கு என்னோட கவலையையும், பிள்ளைகளின் புறக்கணிப்பையும் வெளில சொல்ல கூட தெரியலையே வெளில மூச்சு விட்டா கூட.. அனாவசியமா மூச்சை வெளில ஏன் விடுறனு கேட்பாங்களே.."என்று மனதில் மறுக..

பின்னும் பின்னும்... இளைய மனங்கள், பள்ளி சிறார்கள், குடும்ப தலைவன், தலைவி, ஆழ்மன கவலைகள் கஷ்டங்கள் தானாகவே சம்ருதி செவி புக.. மயக்கமே வரும் போல இருந்தது  அவளுக்கு .. மனித மனம் எப்போதும் துன்பத்தில், வன்மத்தில் தான் உழலுமோ..தண்ணீர் தெளிக்கப்பட்ட பலிகடா போல தலையை சிலுப்பி கொண்டாள்..

""என்ன மகளே.. எல்லாம் கேட்டாயிற்றா..? கேட்டவரை  போதுமா" "என்றே சூரசம்ஹாரி வினவ..

"என்ன அம்மா இது கவலையற்ற மனமே கிடையாதா இப்புவியில்..""வேதனையோடு கேட்டாள் சம்ருதி.

"கவலையும், துன்பமும்,இல்லா மனிதம் இல்லை மகளே ..கவலையற்ற வாழ்க்கை கூட சிலர்க்கு கவலையை அளிக்கும்.. இதான் இயற்கை விதியும் கூட ;மகிழ்ச்சியும் உண்டு என்றாலும்  கவலையை  தூக்கி சுமக்கும் அளவுக்கு மகிழ்ச்சியை தூக்கி சுமப்பது இல்லை..மனித மனத்தை ஊடுருவி பார்ப்பது நரகத்தை இன்னதென அறிய முயற்சி செய்வதற்கு சமம்" என்றாள் ஆதியானவள்..

"அப்போ.. இதோ போறாரே சாமியார் அவர்க்கும் இப்படித்தான் கவலை இருக்குமா??" "என சம்ருதி வினவ..

"வேண்டுமானல் இவரையும் பரிச்சித்துதான் பாரேன்" "மகாசக்தி ஒரு சாமியாரை சுட்ட ..

"ஆத்தாடி.. எனக்கு இதுவே போதும் அம்மா.. வேண்டாம் மனித மனதை ஊடுருவும் சக்தி..இதுவே என் ஜென்மத்துக்கும் போதும்"என அலறினாள் சம்ருதி..

"ஹா.ஹா "என்று அன்னையவள் சிரிக்க அது கொஞ்சம் கொஞ்சமாய் விரவி அண்டத்தையே அதிர வைக்க..

"போதும் போதும்மா..ஏன் இப்படி சிரிக்கிறீங்க l"காதை பொத்தி கொண்டே சம்ருதி எழ..

"யாருடி சிரிக்கிறா.. காலங்காலையில் வேலை செய்யவே பொழுது போதல.. கண்ட கண்ட பேய் படத்தை பாத்துட்டு உளற வேண்டியது.. எந்திரிடி ஆபீஸ்க்கு நேரமாச்சு.." கீழே கிடந்த தலையணையை எடுத்து மகளை ரெண்டு மொத்து மொத்த..

தாயின் மொத்தலில் நன்கு தெளிந்த  சம்ருதி.. ''ச்சே கண்டது எல்லாம் கனவா..? கனவே இத்தனை கொடூரம் என்றாள் நேரில்  கண்டால் என் நிலைமை என்னவாகுமோ..''என்று நினைத்தவள் நிகழ்  உலகத்துக்கு வந்தாள்.."ஏம்மா காலையில் எழுற புள்ளைக்கு காப்பிய கொடுக்காம, அடியா கொடுப்பாங்க என்ன கொடுமைம்மா இது.."

"இன்னும் எழுந்துக்கலையா நீ.. வச்ச காபி ஆறியே போச்சு முதலில் எழுந்து பல்லை விளக்கிட்டு வா பிறகு தரேன் " என்று தாயின் குரல் மீண்டும் வர..

"அம்மா.. அம்மன் தாயி  கனவில் வந்து கொடுத்த சக்தியை நேரிலும் வந்து கொடேன்.. இந்த அம்மாவோட ஆழ் மனகவலையை matum தெரிஞ்சுக்கிறே.. எப்போ பாரு கத்திகிட்டே இருக்காங்க" என்று சம்ருதி  வாய்விட்டே வேண்ட..

"என்னடி அங்க முனுமுனுப்பு "அம்மாவின் குரல் ஓங்கி ஒலிக்க..

"ஒன்னும் இல்லம்மா தோ வந்துட்டேன்.." சம்ருதி துள்ளி குதித்து இறங்கி ஓடினாள். அன்றைய நாளின் வேலையை துவங்க..

சுசீலா,

மேட்டூர் அணை..

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நித்தம் - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நாராயணின் நிலம்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கால நதியில் ஒரு பயணம்: பொன்னியின் செல்வன் சுவடுகளில் 'பழையாறை' வரை!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தீபாவளி - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சடுகுடு பாட்டும்... ஜில் நினைவுகளும்: பாரதிபுரத்தை அதிரவைத்த பனிமலர் கபடிக்குழு!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அணுவைப்பிளந்த அறிவுச்சுடர்: பாகுபாடுகளை வென்ற லீஸ் மெயிட்னரின் சாதனைப் பயணம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க