"அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும்" - அமைச்சர் அன்பில் ம...
``மனிதர்களையே அடித்துக் கொல்லும்போது, விலங்குகள் மீது எப்படி கருணை வரும்?" - நடிகை நிவேதா பெத்துராஜ்
தெருநாய்களை பாதுகாக்க கோரி 'விலங்குகளுக்கான சொர்க்கம்' என்ற அரசு சாரா அமைப்பு சார்பில், புதுப்பேட்டை, லாங்ஸ் கார்டன் சாலையில் நேற்று அமைதி பேரணி நடந்தது. இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டார்.
தெரு நாய்களுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியும், தெருநாய்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியும் பேரணி நடத்தப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகை நிவேதா பெத்துராஜ், ``ஒரு ஊரில் நாய் கடிக்கிறது என்றால் அதை எல்லோருக்கும் பரப்பி, ஒரு பயத்தை உருவாக்கும் செயல். நாய் கடிப்பதால் ரேபிஸ் நோய் வருகிறது, எனவே, நான் நாய்கடியை சரியானது என நான் சொல்லவில்லை.
ஆனால், இதை வைத்து பயத்தைப் பரப்புவதற்குப் பதிலாக என்ன தீர்வு கொடுக்கலாம் என்பதுதான் முக்கியம். சிறுவயதிலிருந்தே இது தொடர்பான புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். ஒருவர் தவறாக நடந்துகொள்கிறார் என்பதால் எல்லோரையும் நான் அப்படியே பார்ப்பதில்லையே. அதேதானே நாய்களுக்கும் நாம் பொருத்திப்பார்க்க வேண்டும்.
ஊடகங்கள் நாய் கடி செய்தியைப் போடும்போதே அதற்கான தீர்வுகளையும் சேர்த்துப் போடுங்கள். நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுகருத்தில்லை. அதே நேரம், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களையும், ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி போடுபவர்களையும் ரேபிஸ் பாதித்தவர்களாக கணக்கெடுக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் 4.5 லட்சம் நாய்கள் இருக்கின்றன. இந்த நாய்களை அடைக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 2500 முகாம்கள் தேவைப்படும். எனவே, இதற்கு அரசு எடுக்கும் முன்னெடுப்புக்கு பதிலாக, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம். அதற்கான என்.ஜி.ஓ-களை நியமிக்கலாம்.

மக்களையும், நாய்களையும் பாதுகாக்கதானே நாம் அவர்களுக்கு வாக்களித்து தேர்வு செய்கிறோம். இதை செய்வது அவர்களின் பொறுப்பு. அரசு மட்டும் இதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதல்ல. குழந்தைகளே நாய்களை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்களே மனிதர்களை அடித்துக்கொல்லும்போது, விலங்குகள் மீது எப்படி கருணை வரும்? எனவே, குழந்தைகளுக்கு நாம் இதையெல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டும். மனிதர்கள் மட்டும்தான் இந்த உலகில் வாழவேண்டுமென்றால் நாம்மால் வாழ முடியாது. கொஞ்சம் அனுசரித்து வாழப் பழகனால் எல்லோருக்கும் நல்லது எனக் கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டார்.

















