அறிமுக இயக்குநருடன் 'ஜாக்கி'யாக துருவ்; டோலிவுட் இயக்குநருடன் கூட்டணி - Dhruv Vi...
மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; போலீஸிடமிருந்து தப்பிக்க முயலும்போது விபரீதம்
அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ராமானுஜ் கோஸ்வாமி (30) என்பவர் தனது மனைவி ரியா என்பவரைக் கொலை செய்துவிட்டு தலையைத் துண்டித்து பாலிதீன் பேக்கில் வைத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் ராமானுஜ் வீட்டைச் சோதனை செய்து ரியாவின் உடலையும், தலையையும் மீட்டனர். பின்னர் ராமானுஜ் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது தனது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவருக்கு அடுத்தவருடன் தொடர்பு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ம் தேதி குற்றம் நடந்த இடத்திற்கு ராமானுஜை போலீஸார் அழைத்துச் சென்றிருந்தபோது, அந்தப் படுகொலை குறித்து கோஸ்வாமி எந்தவிதமான வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும், இந்தக் கொலைக்காக மன்னிப்பு கோரும் எண்ணமோ இல்லை என்றும் அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

மேலும், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டால், தனது மனைவியின் 'சுகர் டாடி' என்று அவர் அழைக்கப்படும் நபரையும் கொலை செய்வேன் என்றும் அவர் மிரட்டினார்.
கொலை செய்தபோது ராமானுஜ் குடிபோதையில் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். கொலை நடந்த வீட்டில் காலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்ததில் ராமானுஜ் இறந்து போனார்.
இன்று அதிகாலையில், கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ராமானுஜ் கோஸ்வாமியை ஹதிகான் போலீஸ் நிலையத்திற்குப் போலீசார் அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது.
கோஸ்வாமி திடீரென போலீஸாரைத் தாக்கிவிட்டு, நரகசுர் பஹார் பகுதிக்கு அருகே ஓடும் வாகனத்திலிருந்து கீழே குதித்தார். அவர் ஒரு பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

















